"20 மாசம் ஆகிடுச்சு இனி பொறுக்கமுடியாது! வாக்குறுதி எங்கே?" - தி.மு.க அரசை எதிர்த்து ஆட்டத்தை துவங்கும் ஜாக்டோ ஜியோ
எங்கள் கோரிக்கைகளுக்கு தி.மு.க அரசு நடவடிக்கை செவிசாய்த்து வாக்குறுதிகள் கொடுத்தபடி நிறைவேற்றவில்லையெனில் தொடர்
எங்கள் கோரிக்கைகளுக்கு தி.மு.க அரசு நடவடிக்கை செவிசாய்த்து வாக்குறுதிகள் கொடுத்தபடி நிறைவேற்றவில்லையெனில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஜாக்டோ ஜியோ நிர்வாகம் தி.மு.க அரசை எச்சரித்துள்ளது.
பழைய புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் அடுத்த கட்ட போராட்டம் நடவடிக்கை குறித்து மதுரையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாநில உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இது குறித்து இந்த கூட்டம் முடிந்தவுடன் அடுத்த கட்ட போராட்டத்தை குறித்து அறிவித்தனர் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள். அந்த அறிவிப்பில் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்ட ஆயத்த மாநாடும், மார்ச் 5ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டமும் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் மார்ச் 24 வட்டார மாவட்ட தலைநகரங்களில் 20,000 கிலோ மீட்டர் மனிதசங்கிலி போராட்டமும் நடத்தப்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
இந்த மூன்று கட்ட போராட்டத்திற்கு பிறகும் தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரித்துள்ளனர் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள். மேலும் அதிகார வர்க்கத்திற்கும் ஆட்சியாளர்கள் இடையே இடைவெளி உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். அதிகாரத்தில் உள்ளவர்கள் எங்களது உரிமையை பறித்து வருகிறார்கள்.
தற்போது தி.மு.க ஆட்சி இரட்டைத்தன்மை ஆட்சியாக இருக்கிறது, தமிழக நிதித்துறை கார்ப்பரேட் சிந்தனையுடன் செயல்படுகிறது. எங்களது கோரிக்கைகள் தொடர்பான நிதி அமைச்சக கோப்புகளை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் புறக்கணிக்கிறார். ஆட்சியாளர்களின் கார்ப்பரேட் சிந்தனைக்கு எதிரான போராட்டத்தை நடத்த உள்ளோம் முதலமைச்சர், நிதி அமைச்சரிடம் அரசு ஊழியர்கள் குறித்து பேச மாட்டார்' என்றார்கள்.