துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜக்தீப் தங்கர் - மம்தாவை தண்ணீர் குடிக்க வைத்த ஆளுநர்

தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதிக்கான வேட்பாளராக ஜக்தீப் தங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-07-17 05:47 GMT

தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதிக்கான வேட்பாளராக ஜக்தீப் தங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் நிலையில் மறுபுறம் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடத்துவதற்கான வேலைகளும் விரைவாக நடந்து கொண்டிருக்கின்றன.

ஆகஸ்ட் 6ம் தேதி அன்று துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது ஒரு வாரத்துக்கு முன்னரே தேதி அறிவிக்கப்பட்ட போதிலும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் தரப்பில் இருந்து வேட்பாளர் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில் பா.ஜ.க வேட்பாளராக ஜக்தீப் தங்கர் அவர்களை அறிவித்துள்ளது, இதனை பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார்.

மேற்குவங்க ஆளுநராக பதவியில் இருக்கும் ஜக்தீப் தங்கருக்கும் அம்மாநிலத்தில் முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜிக்கும் அவ்வப்போது அரசியல் மோதல்கள் வெடித்திருப்பதை ஊடகங்களில் பார்த்திருக்கிறோம், குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக பல மாநில எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டம் நடத்தியது மம்தா என்பது குறிப்பிடத்தக்கது.

71 வயதாகும் ஜக்தீப் தங்கர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கித்தான பகுதியில் 1951 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி அன்று பிறந்தார். இவர் 91 ஆம் ஆண்டுகளில் நாட்டின் ஒன்பதாவது மக்கள் அவையில் ராஜஸ்தானில் ஜனதா தள கட்சியின் சார்பாக எம்.பி.ஆக பதவி வகித்துள்ளார்.

மேலும் 1993 மற்றும் 98 ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ'வாகவும் பதவியில் இருந்துள்ளார், மேலும் இவர் ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.

மேலும் பல முக்கிய பதவிகளிலிருந்து ஜக்தீப் தங்கர் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட உயர்வாக வருகிற துணை ஜனாபதி பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.



Similar News