மதமாற்றத்தை ஊக்குவிக்கிறதா ஜெகன்மோகன் அரசு ? ஒய் எஸ் ஆர் எம்பியின் குற்றச்சாட்டு !

ஒய் எஸ் ஆர் எம் பி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Update: 2021-09-24 11:15 GMT

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்ஸை  சேர்ந்த ரகு ராம கிருஷ்ணா ரெட்டி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்.

பாப்ட்லா தொகுதி எம்.பி அங்குள்ள தேவாலையத்தை சீரமைக்கும் பணிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து  45 லட்சம் ஒதுக்கி உள்ளதை குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஆந்திர அரசும் புதிதாக 248 தேவாலயங்கள் கட்டுவதற்கு 25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இந்த நிதி வெளியில் இருந்து பெறப்பட்டது போல பிம்பம் கட்டமைக்கப்படுகிறது என குறிப்பிட்டார்.

இதனை அடுத்து, தேவாலயங்கள் கட்டும் ஒப்பந்தத்தை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் தெரிந்தவர்கள் குறுக்கு வழியில் பெற்றுக் கொள்வதாகவும் அவர்களுக்கு அந்தப் பணியினை ஒதுக்கீடு செய்ததற்கான முறையான ஆவணங்கள் எதுவும் தரப் படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பொது மக்களின் நலனுக்காகவும் பொது மேம்பாட்டிற்காகவும் செலவிட வேண்டிய நிதியை இவர்கள் மதமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்துகின்றனர். இதனை பிரதமர் கவனத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த கடிதத்தால் ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The Commune

Tags:    

Similar News