'கன்னியாதானம்' பிற்போக்கானதா அல்லது விமர்சனங்கள் இந்து சடங்கின் மீதான தாக்குதலா?
"இந்துமத சடங்குகள், சம்பிரதாயங்களை நாங்கள் துறந்து விட்டோம், நாங்கள் எந்த அளவு முற்போக்குவாதிகள் என்று பார்த்தீர்களா? என்ற ரீதியில் திருமண புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வலம் வருவது வழக்கம். அதுபோல இம்முறை மாட்டிய ஒரு சம்பிரதாயம் 'கன்னியாதானம்'. இந்த கல்யாண சீசனில் இந்தியா மற்றும் உலக அளவிலும் இது சம்பந்தமான செய்திகள் அடிபட்டது.
இதற்கு ஒரு முக்கியமான காரணமாக, திருமண ஆடை அலங்காரங்களை வடிவமைக்கும் 'மான்யவர்' என்ற ஒரு ஆடை நிறுவனத்தின் விளம்பரம் அலியாபட் நடித்து வெளியானது. இந்த விளம்பரத்தில் 'ஒரு மகள் என்பவர் தானம் கொடுப்பதற்கு ஒரு பொருள் அல்ல' என்பது போன்ற 'விழிப்புணர்வை' ஏற்படுத்த முயற்சித்தனர். இதைத்தொடர்ந்து 'பெண் என்பவள் தானமாகக் கொடுப்பதற்கு பொருளல்ல' என்றெல்லாம் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்களின் புகைப்படங்கள் வலம் வந்தன.
இதுதொடர்பாக 'சுபமஸ்து கலெக்டிவ்' என்ற ஒரு பெண்ணியவாதிகள் நிறைந்த ஒரு புரோகிதர் குழுவிடம் பேட்டிகள் எடுக்கப்பட்டது. இதில் நந்தினி என்ற முன்னாள் சமஸ்கிருத பேராசிரியரும் நாடகமேடை நடிகை, பிற்போக்குத்தனமான இந்து திருமண சம்பிரதாயங்களை விட்டொழிக்க வேண்டும் என்ற ரீதியில் ஒரு பேட்டி ஒன்றை அளித்தார். பெண்கள் பணி புரியும் இந்த காலகட்டத்தில் இத்தகைய பிற்போக்குத்தனமான சடங்கை செய்ய முடியும் என்ற ரீதியில் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இதற்கெல்லாம் பதில் கொடுக்கும் சஹிஸ்னு பட்டாச்சார்யா கன்னியாதானம் என்றால் என்ன உண்மையில் என்ன என்பதை இந்தியா பாக்ட்ஸ் வலைதள கட்டுரையில் விளக்குகிறார். இந்த 'கன்னியாதானம்' முறை பிற்போக்குத்தனமாக பார்க்கப்படுவதற்கு காரணம் ஒரு கன்னி (பெண்) தானமாக கொடுக்கப்படுகிறாள் என்ற புரிதலே ஆகும். இது ஒரு பெண்ணை பொருள் போல சமூகம் பாவிப்பதாகவும் குற்றம் சுமத்துகிறது.
ஆனால் உண்மை என்ன? 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தானம் என்பது அப்படியே 'தானம்' என்ற வெளிப்படையான பொருளை குறிப்பது அல்ல. எப்படி? இது குறித்து விளக்கும் ஆசிரியர் ஹரிகரன் சாரியா 'ஒரு பொருளின் மீதான உரிமை முழுவதுமாக நீங்கி மற்றொருவரின் உரிமை தொடங்கும் மட்டுமே தானம் வழங்க முடியும்' ( கா கன்யா கதாஞ்சித் அபி அ-ஸ்வகன்யா கர்துஷ் ஷக்யதே' ) இது எப்படி கன்னியா தானத்திற்கு பொருந்தும்?