'நன்கொடைப் பணத்தில் போதைப்பொருள்' - காங்கிரஸ் ஆதரவாளர் மீது LRO புகார்! @Legallro

Update: 2021-03-20 01:00 GMT

காங்கிரஸ் ஆதரவாளரும், ராகுல் காந்தியின் தீவிர ஆதரவாளருமான சாகேத் கோகலே மீது, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் (NCB) புகார் அளிக்கப்பட்டுள்ளது.

FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), காங்கிரஸ் ஆதரவாளர் சாகேத் கோகலே மீது நன்கொடை வசூல் மூலம் போதைப்பொருள் பணம் பெற்றதாக குற்றம் சாட்டி போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திற்கு புகார் அளித்துள்ளது.

கடந்த மாதம் இது குறித்து வருமான வரித் துறைக்கு கடிதம் எழுதிய LRO, சாகேத் கோகலேவுக்கு அளிக்கப்படும் வெளிநாட்டு நிதியில் காலிஸ்தானிகள் ஆதரவும், வருமான வரி ஏய்ப்பும் செய்ய சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆராய உள்ளதாக தெரிவித்திருந்தது. அது குறித்த விவரங்களையும் கோரியிருந்தது. 



நேற்று இதுகுறித்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியக (NCB) அதிகாரிகளை சந்தித்ததாக LRO தெரிவித்துள்ளது. சில விவரங்களை பகிர்ந்து கொண்டதாகவும், நன்கொடையாளர்கள் விவரங்களை கேட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறது.



LROவின் கூற்றுப்படி, சாகேத் கோகலே ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகன், அந்தப் போலீஸ் அதிகாரி ஒரு காலத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.

கடந்த ஆண்டு, கோகலே 'பா.ஜ.க எனும் வெறுப்பு அமைப்பை' எதிர்கொள்ள ரூ .22 லட்சத்துக்கு மேல் வசூலித்ததாகக் கூறி, சமூக ஊடகங்களில் 'பிரச்சாரத்தை' தொடங்கினார். இதுபோன்ற நன்கொடை வசூல் மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு கோகலே போதைப்பொருட்களை வாங்குவதாக LRO இப்போது குற்றம் சாட்டியுள்ளது.

சேகரிக்கப்பட்ட நிதியை தனது பிரச்சாரத்திற்காக உழைக்கும் மக்களின் செலவுகளுக்காக கொடுப்பதாக மீண்டும் மீண்டும் கோகலே கூறியுள்ளார். இருப்பினும், கோகலே தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.

சமீபத்தில், ராகுல் காந்தியின் தீவிர ஆதரவாளரான சாகேத் கோகலே மீது மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தன. இடது-தாராளவாதிகள் (Left Liberals) உட்பட பலர், "RTI மற்றும் வெளிப்படைத்தன்மை செயற்பாட்டாளர்" என்று அடிக்கடி தன்னைத் தானேக் கூறிக்கொள்ளும் சாகேத் கோகலே ஒரு "மோசடிக்காரர்" என்று குற்றம் சாட்டியுள்ளனர், மேலும் தகவல் அறியும் உரிமை கோரல் தாக்கல் செய்யும் சாக்குப்போக்கில் கோகலே பணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

அமித் பெஹெர் என்ற ஆம் ஆத்மி கட்சி ஆதரவாளர், RTI க்களை தாக்கல் செய்வதன் மூலம் கோகலே பணத்தை வீணடிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார், கோகலேவுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் பொது மக்களுக்கு எந்தவொரு பலனையும் தரவில்லை என்றும் அவை கோகலேவுக்கு மட்டுமே பயனளித்தன என்றும் கூறியிருந்தார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களைப் பாதுகாக்கும் குற்றச்சாட்டில் சாகேத் கோகலேவின் தந்தை 2015 இல் கைது செய்யப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது. பின்னர், அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது.

Tags:    

Similar News