சட்டவிரோத மதமாற்றங்களுக்கு 2.03 கோடி - 'ஆவாஸ்-எ வாய்ஸ் ஆப் தி வாய்ஸ்லெஸ்' மீது LRO புகார்!
இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.
FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), 'ஆவாஸ்-எ வாய்ஸ் ஆப் தி வாய்ஸ்லெஸ்' என்ற அமைப்பு, 'கிரேட் கமிசன் ஆப் தி மினிஸ்டரிஸ்' என்ற பின்லாந்தை சேர்ந்த எவாஞ்சலிஸ்ட் மிஷனரி அமைப்பிடமிருந்து 2.03 கோடி ருபாய் பெற்று சட்டவிரோத மத மாற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.
அனாதைக் குழந்தைகள் மற்றும் பெண்கள் என இலக்கு வைத்து மதமாற்றம் செய்யும் இவ்வமைப்பின் நன்கொடையாளர்கள் 'கிரேட் கமிசன் ஆப் தி மினிஸ்டரிஸ்' தீவிரமான மதமாற்றி சுவிஷேஷகர்களாவர்.
இது குறித்து விசாரணை நடத்த LRO, உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.