உணவு, தாங்கும் வசதியுடன் அக்னிபத் பயிற்சி முகாம் - அசத்திய மதுரை பா.ஜ.க, குவிந்த இளைஞர் படை
அக்னிபத் திட்டத்தில் சேர இளைஞர்களுக்கு பயிற்சி முகாம் அளிப்போம் என மதுரை பா.ஜ.க'வினர் அறிவித்தது மட்டுமில்லாமல் பயிற்சி முகாமையும் துவங்கி உள்ளனர்.
அக்னிபத் திட்டத்தில் சேர இளைஞர்களுக்கு பயிற்சி முகாம் அளிப்போம் என மதுரை பா.ஜ.க'வினர் அறிவித்தது மட்டுமில்லாமல் பயிற்சி முகாமையும் துவங்கி உள்ளனர்.
ராணுவத்தில் ஆட் சேர்ப்பதற்கான மத்திய அரசு அக்னிபத் திட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது 2 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர்வதற்கு விண்ணப்பித்து உள்ளனர்.
இந்நிலையில் அக்னிபத் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் ராணுவத்தில் சேருவதற்கான வழிகாட்டல் மூலம் பயிற்சி முகாம்களை பா.ஜ.க'வினர் நடத்த துவங்கி உள்ளனர்.
அந்த வகையில் இரண்டு நாள் பயிற்சி முகாமை பா.ஜ.க ஏற்று மதுரையில் தொடங்கியுள்ளது, மதுரை பொன்மேனிப் பகுதியில் இந்த பயிற்சி முகாமை மாநகர மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். பெருமாள் கதலி நரசிங்க பெருமாள் அக்னிபத் திட்டம் குறித்து இளைஞர்களுக்கு விளக்கினார்.
மாநில பேராண்மை பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு உறுப்பினர் ராஜ்குமார், தேசிய அத்லெட்டிக் பயிற்சியாளர்கள் அனு அப்சரா, ராஜேஷ் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு உடல் தகுதி பயிற்சி அளித்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர், பா.ஜ.க'வினர் அவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதியும் ஏற்பாடு செய்திருந்தனர். அக்னிபத் திட்டத்தில் விண்ணப்பிக்கவும் அந்த முகாமில் பா.ஜ.க'வினர் ஏற்பாடு செய்தனர். இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிடப்பட்டுள்ளது என பா.ஜ.க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.