ஏர்போர்ட் போல மாறப்போகும் மதுரை ரயில் நிலையம் - அசால்ட்டு செய்யும் மோடி அரசு

மதுரை ரயில் நிலையத்தை மறு சீரமைப்பு செய்யும் பணிகளை இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்து தமிழக வழங்கும் நிலையில் அதுகுறித்த சிறப்பு பார்வை.

Update: 2022-05-26 09:01 GMT

மதுரை ரயில் நிலையத்தை மறு சீரமைப்பு செய்யும் பணிகளை இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்து தமிழக வழங்கும் நிலையில் அதுகுறித்த சிறப்பு பார்வை.

பிரதமர் மோடி இன்று சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்கள் மொத்தமாக 1500 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்வதற்கான பணிகளை துவக்கி வைக்க வருகிறார்.


இதில் மதுரை ரயில் நிலையம் மற்றும் 440 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. அதன்படி ரயில் நிலைய வளாகத்தில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துதல், பயணிகள் மற்றும் சேவைகளுக்கு தனித்தனி அறை அமைத்தல் வாகன நெரிசலை குறைக்க தேவையான கட்டமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் அடங்கும்.


முதல் தளத்தில் பயணிகள் வருகை மற்றும் புறப்பாடு தேவையான பிரத்தியோக தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது அங்கு பயணி செல்வதற்காக ஏதுவாக லிப்ட் ஆப்பரேட்டர் வசதி மற்றும் எஸ்கேலேட்டர், கழிப்பறைகள், உணவகங்கள் உள்ளிட்ட பகுதியில் உருவாக்கப்பட உள்ளன.


250 நான்கு சக்கர வாகனம் மற்றும் 2000 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று தனித்தனியாக பல அடுக்கு வாகன காப்பகங்கள் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் சுரங்கப் பாதை போன்றவைகளும் இதில் அடங்கும்.


மேலும் இருசக்கர வாகனம், ஆட்டோ, நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கான தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர்த்து 6 நடைபாதைகளையும் புதுப்பித்தல், சரக்கு சேவை பணிகளை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பல பணிகளும் 26 மாதங்களில் நிறைவு பெறும் என மதுரை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News