திருமணம் ஆகாத 40,000 தமிழ் பிராமண இளைஞர்கள் ! தாம்பிராஸ் எடுக்கும் புதிய முயற்சி!
40,000 தமிழக பிராமண இளைஞர்களுக்கு திருமண வரன் கிடைக்காததால் பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் வரன்களை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .
"நாங்கள் எங்கள் சங்கத்தின் சார்பில் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளோம் " என்று தமிழ்நாடு பிராமணர்கள் கூட்டமைப்பின் மாதாந்திர தமிழ் பத்திரிக்கையில் எழுதிய கடிதத்தில் அந்த அமைப்பின் தலைவர் என்.நாராயணன் குறிப்பிட்டிருக்கிறார்.
"கிட்டத்தட்ட 30 வயது முதல் 40 வயது வரம்பிலுள்ள தமிழக பிராமண இளைஞர்களுக்கு தமிழகத்தில் போதிய வரன் கிடைக்காமல் இருக்கின்றன" என்று அந்த கடிதத்தில் நாராயணன் குறிப்பிட்டுள்ளார்
மேலும் அவர் குறிப்பிடுகையில் "பத்து திருமண வயதுடைய இளைஞர்களுக்கு , வெறும் ஆறு திருமண வயதுடைய பெண்களே பிராமண சமுதாயத்தில் இருக்கின்றன. இந்த முன்னெடுப்பை துரிதப்படுத்த டெல்லி, லக்னோ மற்றும் பாட்னாவில் ஒருங்கிணைப்பாளர்களை நாங்கள் நியமித்துள்ளோம்" என்று கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்த முயற்சி பிராமண சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது !
"பிராமண சமுதாயத்தில் பெண் வரன் கிடைப்பது குறித்து கல்வியாளர் எம்.பரமேஸ்வரன், கூறுகையில் : தமிழக பிராமண சமுதாயத்தில் பெண்கள் வரன்குறைவு என்பது உண்மை தான், ஆனால் அது மட்டுமே இந்த நிலைக்கு காரணமல்ல.
மணமகன் வீட்டாரின் எதிர்பார்ப்பே இந்த நிலைக்கு காரணம் !
மணமகன்கள் விட்டார்கள் பெரும்பாலும் ஆடம்பரத்தையும், சௌகரியத்தையும் விரும்பக்கூடியவர்களாக இருக்கிறார்கள். திருமண நிகழ்ச்சியை ஆடம்பரமான பெரிய திருமண மண்டபத்தில் நடக்க வேண்டுமென்று பெண் வீட்டாரை நிர்பந்திக்கின்றனர். ஏன் திருமணத்தை கோயில் மற்றும் வீட்டில் செய்தால் ஆகாதா ???