மேகதாது அணைக்கு ரூ9000 கோடி ஒதுக்கீடு.. கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.. மௌனம் காக்கும் தமிழக காங்கிரஸ் மற்றும் தி.மு.க..
தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக காவிரி நதிநீர் பிரச்சனை நீடித்து வந்தது. சமீபத்தில் மேகதாது அணை கட்டும் திட்டத்தால் இந்த பிரச்சனை உச்சம் தொட்டது. தமிழகத்தில் திமுகவுடன் இணைந்திருக்கும் காங்கிரஸ் கட்சி, தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பிரச்சனையில் மாறுபட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை (CWMA) நியமிப்பதற்கான 2018 மே 18 தீர்ப்புக்குப் பிறகும் இரு மாநிலங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடு முடிவுக்கு வரவில்லை. காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டும் திட்டத்தால் பிரச்சனை மேலும் தீவிரமடைந்தது.
ஆகஸ்ட் 2021ல், தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் அணை கட்டும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். திமுக எம்பி தயாநிதி மாறன் போராட்டத்தை விமர்சித்ததுடன், கர்நாடக அரசுக்கு தனது செய்தியை தெரிவிக்குமாறு தமிழக பாஜக தலைவரை வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர், தமிழக விவசாயிகளை ஏற்றிச் செல்ல தயாநிதி மாறனின் தனி ஜெட் விமானத்தை அனுப்புமாறு கூறியிருந்தார்
21 மார்ச் 2022 அன்று, மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது, இதற்கு பாஜக மற்றும் காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளித்தன. இருப்பினும், இதற்கு முன், கர்நாடக காங்கிரஸ் திட்டத்திற்கு ஆதரவாக பேரணிக்கு ஏற்பாடு செய்தது.