'மிஷன் 2024' - அண்ணாமலையின் தேர்தல் கணக்கு! பா.ஜ.க புது நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்னணி
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பா.ஜ.க'வின் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் அண்ணாமலை களத்தில் புதிய நிர்வாகிகளுடன் இறங்கியுள்ளார்.
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பா.ஜ.க'வின் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் அண்ணாமலை களத்தில் புதிய நிர்வாகிகளுடன் இறங்கியுள்ளார்.
இந்தியா முழுவதும் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது, இதில் தமிழகத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையிலான அணி பெரும்பான்மையான இடங்களை பிடிக்க வேண்டும் எனவும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தமிழக பா.ஜ.க'வின் உறுதுணை அதிகமாக இருக்க வேண்டும் எனவும் கருத்தில் கொள்ளப்பட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக இது குறித்த ஆலோசனையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஈடுபட்டிருந்தார், இவ்வாறு புதிய நிர்வாகிகளை மாற்றுவதன் மூலம் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச முடியுமெனவும் முன்பு இருந்ததைவிட அதிக அளவில் களப்பணி செய்து தமிழக பா.ஜ.க'வை இன்னும் அதிகமான மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும் என்பது அண்ணாமலை அவர்கள் ஆணித்தரமாக நம்புகின்றார்.
டெல்லி மேலிடத்தின் முழு சம்மதத்துடன் அமாவாசை தினமான நேற்று தமிழகத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பட்டியலை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார், மேலும் இது முதற்கட்டம் மட்டுமே எனவும் தெரியவந்துள்ளது. இன்னும் பல புதிய நிர்வாகிகளும் செயற்குழு உறுப்பினர்களும் பற்றிய அறிவிப்பு வரும் காலங்களில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க தரப்பில் கட்சியிலுள்ள கட்டமைப்பை வரும் 2024 தேர்தலை கருத்தில் கொண்டு அண்ணாமலை அவர்கள் மிகவும் பலமாக கட்டமைத்து உள்ளார் என்றே கூறலாம் இவ்வாறு அண்ணாமலை அவர்கள் போடும் கணக்கு சரியாக இருப்பின் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் தமிழகத்தில் 50 சதவிகித தொகுதியானது பா.ஜ.க வசம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.