தோமா இந்தியா வருகை கப்சாவை நிரூபித்த- இந்தியாவில் செயிண்ட் தாமஸ் கட்டுக்கதை! நூல்.
ஆசிரியர் – வரலாற்று பேரறிஞர். வேதப்பிரகாஷ்.
தோமோ இந்தியா வந்தார் என்றும் கேரளத்திலும் தமிழகத்திலும் கிறிஸ்தவ மதமாற்ற தொழிலை செய்து விட்டு கடைசியில் சென்னையில் இறந்தவருடைய கல்லறை சென்னையில் உள்ளதாகவும் கட்டுக்கதை பரப்பப்படுகிறது. இந்த கதையை மேலும் நீட்டி வளர்த்தி தோமாவை சந்தித்து திருவள்ளுவர் கிறிஸ்தவத்தை கற்றுக்கொண்டதால் மட்டுமே திருக்குறளை இயற்றினார் என்றும் அதிலிருந்து தான் சைவம் வைஷ்ணவம் போன்ற மதங்கள் வந்தன என்றும் பல முனைவர்பட்ட கையேடுகள் திராவிட கிறிஸ்தவ கூட்டணியின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களால் தரப்பட்டுள்ளன.
தமிழகத்தின் அன்றைய முதல்வர் மு கருணாநிதியின் அணிந்துரை 1969ம் "திருவள்ளுவர் கிறித்தவரா" எனற் நூல் வந்தது. அடுத்த 15 ஆண்டுகளில் மேலும் சில நூல்கள் என வளர்ந்து அது "திருக்குறள் – விவிலியம்- சைவ சித்தாந்தம் ஒப்பாய்வு"ஒரு முனைவர் பட்ட கையேடு வெளியானது. வரலாற்று பேரறிஞர் வேதபிரகாஷ் அவர்கள் செயின்ட் தாமஸ் வருகை எனும் ஊகத்தை வரலாற்று தரவுகளை வைத்து எழுதிய ஆய்வு நூலே இது.
தோமோ இந்தியா வருகை என்பதற்கு எந்த ஒரு முதன்மை தரவுகளும் கிடையாது. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டது என கூறப்படும் தோமாவின் பணிகள் ( நடபடிகள்) என்ற நூல் மட்டுமே ஆகும். வேதபிரகாஷ் தன் நூலில் முழுமையாக தோமோ பற்றிய எல்லா தகவல்களையும் ஆராய்ந்து வரலாற்று ரீதியாக முழு பொய் என்பதை நிரூபித்தார் என்பதை நாம் இங்கு சற்று சுருக்கமாக காண்போம்.
ஆரம்பத்திலேயே எப்படி, 'ஆங்கிலத்திலும், தமிழிலும் மொழி நடையை மாற்றி தோமாவின் கதையை பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளனர் என்றும் தெளிவாக விளக்கியிருக்கிறார்.
பைபிள் சுவிசேஷக் கதைகளில் இயேசு மற்றும்சீடர்கள் யார் என்பதைப் பற்றி உள்ள கதை குறிப்புகளில் சீடர்கள் 12 பேர் என்பதைப் பற்றி சரியான தரவுகள் கிடையாது. பல விபரங்கள் முரண்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டி அதில் இருந்து தொடங்கி பல்வேறு அதிகாரங்களாக இந்த நூலை அமைத்துள்ளார்.