ஆசிரியர் ஜாய்சன் மீது ஏற்கனவே நிறைய கேஸ்கள் உண்டு! திடுகிடவைக்கும் மாணவனின் பெற்றோர் !
கிருஸ்தவ மிஷனரிப் பள்ளிக்கூடங்களில் இந்துக் குழந்தைகள் மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இந்து மதத்திற்கு எதிரான போதனை கட்டாயமாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ளவும், கழுத்தில் ருத்ராட்சம் அணிந்துக்கொள்ளவும் தடைவிதிக்கப்படுகிறது. சொல்லப்போனால் இந்துவாக இருப்பதே அவமானம் என்ற வகையில் தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகின்றனர். அதேநேரம் கிருஸ்தவ மதம் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது என்று 'மிஷன் காளி' அமைப்பு பல காலமாகவே எச்சரித்து வந்துள்ளது.
மிஷன் காளி எச்சரித்ததுப் போலவே நடந்துவிட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆண்டர்சன் பள்ளியில் ருத்ராட்சம் அணிந்து வந்ததற்காக மாணவன் கிருபானந்தன், ஜாய்சன் என்ற ஆசிரியரால் கொடூரமாக தாக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே! 'ரெளடிப் பசங்கதான் ருத்ராட்சம் அணிவார்கள்' என்று சொல்லிச் சொல்லி அந்த மாணவனை அடித்ததுதான் மதவெறியின் உச்சக் கட்ட வெளிப்பாடு!
இந்த சம்பவம் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு நீதி கிடைத்ததா? தவறு செய்த ஆசிரியர் ஜாய்சன் தண்டிக்கப்பட்டாரா? என்பதைத் தெரிந்துக்கொள்ள மாணவன் கிருபானந்தனின் தாய் ஹேமாவதியை தொடர்புக் கொண்டு பேசினோம். அவர் கூறும்போது, 'அந்தப் பள்ளியில் இப்படியெல்லாம் நடக்கும் என்று நாங்கள் நினைத்துப்பார்க்கவே இல்லை. ஆசியர் ஜாய்சன் ஏற்கனவே பலமுறை ருத்ராட்சம் அணிந்துவந்ததற்காக என் மகனை அடித்து அவமானப்படுத்தியுள்ளார். ஆனால் இது எங்களுக்குத் தெரியவில்லை.
பிறகு என் மகன் சொல்லித்தான் எனக்கு விஷயமே தெரியவந்தது. அதுமட்டுமல்ல… ஆசிரியர் ஜாய்சன் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையிலும், தெரிந்த வட்டத்திலும் தற்போது கூறுகிறார்கள். இப்போது அதை கேள்விப்பட்டு அதிர்ச்சியாக உள்ளது. அந்த ஆசிரியர் மீது நாங்கள் காவல்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறோம். அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்திருக்கிறார்கள்.