மூத்த குடிமக்களுக்கு மோடி அரசின் புத்தாண்டு பரிசு - சேமிப்பு திட்ட வட்டியை அதிரடியாக உயர்த்தி நாளை முதல் அமல்

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்ட வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிக்கப்பட்டு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

Update: 2022-12-31 07:31 GMT

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்ட வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிக்கப்பட்டு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகித உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நிதியாண்டின் சிறுசேமிப்பு திட்டங்கள், தேசிய சேமிப்பு பாத்திரங்கள் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் உட்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

அதன்படி மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கு இனி 8 சதவிகித வட்டியும், தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கு ஏழு சதவிகித வட்டியும் கிடைக்கும். அதே போல் அஞ்சலகங்களில் வரும் ஒரு வருடம் முதல் ஐந்து வருடம் வரை நான் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதங்கள் 1.1% வரை அதிகரித்துள்ளது. தொழிலாளர் வைப்பு நிதியான பி.எஃப், செல்வமகள் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இல்லை.

Similar News