நாகர்கோவிலில் வெற்றி வாகை சூடுவாரா மக்களுக்கான அரசியல் தலைவர் MR காந்தி?
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்பில் நிற்கும் பா.ஜ.க வேட்பாளர் MR காந்தி. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நன்கறியப்பட்ட முகமாவார். 1967-ல் ஜன சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும், 1975-ஆம் ஆண்டு அக்கட்சியின் மாநில செயலாளராகவும் இருந்தார். காங்கிரஸினால் கொண்டுவரப்பட்ட அவசர நிலை பிரகடனத்திற்கு எதிராக ஜனநாயகம் காக்கப் போராடினார்.
1975 இல் MISA (உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்பு சட்டத்தின்) வின் கீழ் ஒரு வருடம் சிறையில் இருந்தார். அதற்கு பிறகு உருவான பா.ஜ.க-வில் மாநில செயலாளராக, மாநில பொதுச் செயலாளராக, மாநில துணைத்தலைவரக பணியாற்றி தற்பொழுது தேசிய செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
கட்சிகளைத் தாண்டி அவரை யாரும் மனிதாபிமான உதவிக்காக அணுகலாம். தேவைப்படுபவர்களுக்கு களத்தில் இறங்கி உதவி செய்ய அவர் எப்போதும் இருப்பார். காந்தியைப் போல் எளிமைக்கு பெயர் போன இவர், எளிதாக அணுகக் கூடியவர், எளிமையானவர், பல்வேறு பிரிவுகளைக் கடந்து அரசியலில் அவருக்கு நல்ல பெயரும் மரியாதையும் சமுதாயத்தின் அனைத்து இடங்களில் இருந்தும் கிடைத்துள்ளது.
அவருடைய மாவட்டத்தில் மதவாதம் இருக்கிறது. கன்னியாகுமரி கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மதவாத கலவரங்கள் வெடிக்கும் இடமாக இருந்து வருகிறது. கிறிஸ்தவ மிஷனரிகள் கன்னியாகுமரியை ஒரு கிறிஸ்தவ மாவட்டமாக மாற்ற தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
சமீபத்தில் உலகளாவிய இஸ்லாமிய நடவடிக்கைகளும் அங்கே அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த மாவட்டத்தை தனித்து காட்டுவது எது என்றால் எந்த ஒரு முறையான ஆதரவோ, சுதந்திரத்திற்கு பிறகான இந்திய அரசாங்கத்திடமிருந்து அனுதாபமோ இல்லாவிட்டாலும் இம்மாவட்டத்தில் இந்துக்கள் தொடர்ந்து ஈடுகொடுத்து சமாளித்து வருகின்றனர்.
சுதந்திரத்திற்குப் பின்னால் தான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் இங்கு வேரூன்றின. இதனால் இங்கே குறிப்பிடத் தகுந்த இந்து ஒருங்கிணைப்பு இருக்கிறது. ஆனால், கிறிஸ்தவ மிஷனரிகளின் பிடிப்பு இங்கே கடுமையானது. மாநிலத்திலேயே மிகவும் உயர்ந்த காங்கிரஸ் தலைவரான காமராஜர் கூட இந்தப் பகுதியில் தேர்தலில் நின்ற பொழுது சில பகுதிகளில் இந்து மத எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிட்டது.