மாணவிக்கு கை கொடுத்த SG.சூர்யா.. ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாற்றி போட்ட அறிவிப்பு..

பிளஸ் டூ பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று கிருஷ்ணபிரபா என்ற மாணவிக்கு பொற்காசை வழங்கிய பா.ஜ.க மாநில செயலாளர்.

Update: 2023-05-14 13:05 GMT

ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 12-ம் வகுப்புக்கான இந்த 2022 - 2023 கல்வியாண்டின் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதி முடித்து விட்டு தங்களது முடிவுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே எட்டாம் தேதி அன்று வெளியாகி இருக்கிறது. இந்த பொதுத்தேர்வில் பல்வேறு தரப்பும் மாணவ மாணவிகளும் அதிகமான மதிப்பெண்களை பெற்று இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 8.17 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தாமதமாக வெளிவந்தது ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 12 ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13 ல் தொடங்கி ஏப்ரல் 3-ம்தேதி வரை நடந்தது. இந்த தேர்வு எழுத 8,36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறை கைதிகள் என மொத்தம் 8.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை.



இந்த நிலையில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜே.சூர்யா அவர்களின் தென் சென்னை பரங்கிமலை பகுதியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தில் சேர்ந்த மாணவி அதிக மதிப்பெண் பெற்றதற்கு நேரில் சென்று தன்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், "தனது தென் சென்னை பகுதி பரங்கிமலை பகுதிகளில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த மாணவி தான் கிருஷ்ணபிரபா என்பவர். இவர் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு 596 மதிப்பெண் பெற்று இருக்கிறார். குறிப்பாக 600க்கு 596 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார், மேலும் நான்கு பாடங்களில் இவர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று உள்ளார். பன்னிரண்டாம் வகுப்பில் வணிகக் கணிதம், பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல் ஆகிய நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்று இருக்கிறார். மாணவி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவருடைய படிப்பு செலவிற்கு குடும்பம் கஷ்டப்பட்டு வருகிறது என்பதை அறிந்த பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜே. சூர்யா அவர்கள் அதிக மதிப்பெண் பெற்ற பொன் மகளுக்கு பொற்காசுகளை நேரில் சென்று வழங்கி இருக்கிறார்.


குறிப்பாக ஏழ்மை நிலையிலும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிக்கு பொற்காசுகளை அளித்ததோடு மட்டுமல்லாமல் நமோ பவுண்டேஷன் மூலமாக மாணவியின் கல்வி செலவுகள் முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக ஒப்புக்கொண்டு இருக்கிறார். மாணவியின் மேற்படிப்பிற்கான அனைத்து செலவுகளையும் நமோ பவுண்டேஷன் ஏற்றுக்கொள்ளும் என்று மகிழ்ச்சியான செய்தியை அவருடைய பெற்றோருக்கு தெரிவித்து மகிழ்ச்சி உடன் அங்கிருந்து விடை பெற்று இருக்கிறார்". எனவே நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவி கிருஷ்ண பிரபாவிற்கு நமோ பவுண்டேஷன் மேற்படிப்பிற்கான உதவிகளை வழங்கும் என்று SG. சூர்யா கூறியவுடன் மாணவியின் குடும்பத்திற்கு இந்த ஒரு அறிவிப்பு பெரும் மன நிம்மதியை அளித்திருக்கிறது.  

Tags:    

Similar News