அமெரிக்கா வரை அளந்துவிடறாங்க! GER 52% திராவிட மாடல் உருட்டு - ஆதாரத்துடன் அம்பலமான புள்ளிவிவரம்!
தேசிய அளவில் உயர் கல்வி மாணவர் சேர்ப்பு சராசரி 50 சதவிகிதத்தை தாண்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை GER என்று அழைப்பார்கள். அதாவது Gross enrolment ratio. பள்ளி படிப்பு முடித்து கல்லூரி சேரும் நபர்களின் எண்ணிக்கை ஆகும் இது. இதன் தேசிய சராசரி 27.1%. ஆனால் தமிழ்நாட்டின் சராசரி 51.4% என தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் கூறினார்.
தமிழ்நாடு இந்த சராசரியை 15 வருடங்களுக்கு முன்பே அடைந்துவிட்டது. இதைத்தான் இப்போது தேசிய கல்விக்கொள்கை இலக்காக நிர்ணயித்து உள்ளது. இதைத்தான் கல்வியாளர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.தமிழ்நாடு கல்வியில் உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி முன்னணியில் உள்ளது. ஜெர்மனி, அமெரிக்காவில் கூட இவ்வளவு மாணவர் சேர்க்கை இல்லை என்றெல்லாம் பேசினார்.
இதை பற்றிய தெளிவான புரிதல் பெற நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது GER Ratio என்றால் என்ன என்று.
No. Students Enrolled for Higher Studies
GER Ratio = -------------------------------------------------------- X100
Population between 18-23 Years
சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ஒரு மாநிலத்தில் 18-23 வயதுள்ள நபர்கள் எவ்வளவு? அவர்களில் எத்தனை பேர் உயர் படிப்புகளில் (Higher Studies) சேர்க்கிறார்கள் (Enrollment).
ஆக GER Ratio என்பது இரண்டு வகையாக உயரும்
மாணவர்கள் அதிகம் கல்லூரியில் சேர்வதாலோ (High Enrollment)
அல்லது 18-23 வயது மக்கள்தொகை குறைவதாலோ (Decrease in 18-23 Population)
தமிழகத்தில் GER உயர்ந்திருப்பது இரண்டாவது வகை காரணத்தால். அதாவது 18-23 வயது மக்கள்தொகை குறைவே இங்கு GER 52% ஆக உயர்ந்திருப்பதற்கு காரணம். நம் மாநில அமைச்சர்களை போலவோ அல்லது தமிழக மூத்த பத்ரிக்கையாளர்களை போலவோ அவர்கள் சொல்வது தான் ஆதாரம் என்று இல்லாமல் அதெப்படி என்பதை ஆதராங்களோடு பாப்போம்.