கவச் என்றால் கருவி எனக் கூறும் தி.மு.க எம்.பி.. கச்சிதமான கேள்வியை கேட்டு தெறிக்க விட்ட பா.ஜ.க தரப்பு!

ரயில்களை விபத்துக்கு உள்ளாகாமல் தடுக்கும் கவச் தொழில்நுட்பம் என்றால் என்ன?

Update: 2023-06-05 03:47 GMT

ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் மோதிக் கொள்ளாமல் தடுப்பதற்கு, ரயில் விபத்துகள் நேர்வதைத் தடுக்கும் வகையில் கவச் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு அடுத்த ஆண்டுக்குள் 2024 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில்கள் மோதிக்கொள்வதைத் தவிர்ப்பதற்காக TCAS என்ற கருவி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2014ஆம் ஆண்டு பாஜக அந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தி கவச் என்று பெயர் வைத்தது.


வெள்ளிக்கிழமை ஒடிசாவில் நேர்ந்த மூன்று ரயில்கள் விபத்தில் இந்த கவச் தொழில்நுட்பம் பயன்படுத்தாதுதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் பலவாறு குற்றம் சாட்டியிருந்தார். கடந்த ஆண்டுகளில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட கவச் தொழில்நுட்பம் அடுத்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என ரயில்வே துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது. கவச் தொழில்நுட்பம் என்பது செயற்கைகோள் மூலமாக 4ஜி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தான் ரயில் தானாகவே நின்றது.


கவச் என்பது கருவி அல்ல. கவச் என்றால் தமிழில் 'கவசம்' என்று பொருள். இந்த தொழில் நுட்பம் ரயில்-சிக்னல்கள்-கட்டுப்பாட்டு அறை அனைத்தையும் இயக்கும். கவச். 2022, மார்ச் 23-ஆம் தேதி ரயில்வே அமைச்சகம் இதனை அறிவித்தது. அதன்படி, ரிசர்ச் டிசைன்ஸ் மற்றும் ஸ்டாண்டர்ட்ஸ் ஆர்கனைசேஷன் மூலம் மூன்று இந்திய நிறுவனங்கள் உருவாக்கிய இந்த கவச் எனும் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பை ரயில்வே அமைச்சகம் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தது. குறிப்பாக இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம் என்பதை எதிர்க்கட்சியினர் அறிந்து கொள்ள வேண்டும். தெரியவில்லை எனில் தெரிந்து கொள்ளுங்கள்.


மேலும் இது தொடர்பாக ஆளும் கட்சி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் கவச் என்ற கருவி விபத்துக்கு உள்ளான ரயில்களில் பொருத்தி இருந்தால் இந்த விபத்து நேராமல் இருந்திருக்கும் என்று எல்லாம் பல்வேறு செய்திகளை கட்டி விடுகிறார்கள். இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி தெரிவித்து இருக்கிறார்.

அவர் மேலும் கூறும் பொழுது, "கவச் தொழில் நுட்பம் இன்றைக்கு கிடைத்திருக்கிற தகவலின் படி 68,000 கிலோமீட்டர் ரயில்வே பாதையில் வெறும் 1500 கிலோமீட்டருக்கு தான் கொடுத்திருக்கிறார்கள். தி.மு.க மக்களவை உறுப்பினர் அ.ராசா அவர்களே, கவச் கருவி அல்ல, செயற்கைகோள் சார்ந்த ஒரு திட்டம் என்பது கூட தெரியாமல் உளறுவது முறையா? பாராளுமன்றத்தில் இது குறித்து விளக்கிய போது உறுப்பினர் தூங்கி கொண்டிருந்தாரா அல்லது அவையிலேயே இல்லையா? என்பதை விளக்க வேண்டும்.


ஒரு கிலோமீட்டருக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த 50 லட்சம் செலவாகும் என்பது இந்த தி.மு.க முன்னாள் அமைச்சருக்கு தெரியுமா? 2022-23 ல் இந்த திட்டத்தை திட்டமிட்ட அளவுக்கு நிறைவேற்றியது தெரியுமா இல்லையா? 2ஜி புகழ் ராசாவுக்கு இந்த திட்டம் 4ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் என்று தெரியுமா? லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை தெளிவாக பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன போது எங்கு சென்றிருந்தார் அ .ராசா? இப்படி எது பற்றியும் தெரியாமல் கவச் தொழில்நுட்பம் பற்றி பல்வேறு வதந்திகளை கிளப்பி விடுவது தவறான செயல் என்றும்" குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News