ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம்: ஒவ்வொரு இந்தியாவின் அடையாளமாகும் திட்டம் - ஓர் பார்வை!
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் 2021ல் துவங்கப்பட்டது. இதன் மூலம் நாடு முழுதும் உள்ள மருத்துவமனைகள் ஒரே குடையின் கீழ் இணைக்கப்படும். இது மருத்துவமனைகளின் செயல்முறைகளை எளிமையாக்கும். இந்த கீழ் ஒவ்வொரு குடிமகனும் டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டையைப் பெறுவார்கள்.
அவர்களது சுகாதார ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படும். இதனால் அவர்களுடைய உடல்நிலை பற்றிய தகவல் இந்தியாவில் எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் எளிதாக தெரியும். இதன் மூலம் ஒருவரின் கடந்த கால நோய் பற்றி தெரியாமல் மருத்துவம் பார்க்கும் சிக்கல்கள் தடுக்கப்படும்.
தொடக்கம்
2022ல் தொடங்கி ஐந்தாண்டுகளுக்கு ரூ 1,600 கோடியில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேசிய சுகாதார ஆணையம் (National Health Authority) இந்த திட்டத்தை செயல்படுத்தும்.
தரவு, தகவல் மற்றும் உள்கட்டமைப்புச் சேவைகள், ஆரோக்கியம் தொடர்பான தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு, ரகசியத்தன்மை மற்றும் தனியுரிமை ஆகியவற்றை உறுதி செய்து கிட்டத்தட்ட டிஜிட்டல் முறையில் ஆதார் ஆணையம் போல ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படும்.
இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள சேவைகளின் எண்ணிக்கை 40 ஆக உள்ளது. 16 அரசு செயல்பாடுகளையும் 24 தனியார் துறை செயல்பாடுகளையும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது.
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் எண்களை உருவாக்கிக் கொள்ள முடியும். அவர்களின் டிஜிட்டல் சுகாதாரப் பதிவுகளை அதனுடன் இணைக்கவும் முடியும். பதிவு செய்த பின் வரும் எண்ணை மட்டும் கூறினால், இந்தியாவில் எங்கு சென்றாலும் ஒருவரின் மருத்துவ வரலாற்றை மருத்துவமனைகள் எளிதில் எடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.2023 வரை 567 பொது மற்றும் 638 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களுடன் 1205 சுகாதார வசதிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திட்டத்தில் இணைய https://abdm.gov.in/