கண்ணும் கருத்துமாக பார்க்கப்படும் எல்லை கிராமங்கள்: எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்தின் பின்னணி!

Update: 2023-10-07 01:08 GMT

Vibrant Villages Programme - எழுச்சிமிகு கிராமங்கள் திட்டம்: மத்திய அரசின் நிதியுதவியுடன் “எழுச்சிமிகு கிராமங்கள் திட்டம் வடகிழக்கு மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2022 முதல் 2026 வரை இந்த திட்டத்துக்கு ரூ4800 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் எல்லை பகுதியில் வசிக்கும் மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேறுவதைத் தடுக்கவும், எல்லையின் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த திட்டம் உதவும்.

எல்லைப்புற கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு தரமான வாழ்க்கையை வழங்கி ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு இது உதவும். நாட்டின் வடக்கு கிழக்கு எல்லையில் உள்ள 19 மாவட்டங்கள் மற்றும் 46 எல்லைத் தொகுதிகள் 4 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் அத்தியாவசிய உள்கட்டமைப்புகளை மேம்படுத்த இந்த திட்டம் நிதியை வழங்குகிறது.

முதல் கட்டமாக 663 கிராமங்கள் திட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.தொழில்முனைவோரை மேம்படுத்துதல், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவை மேற்கொள்ளப்படும். உள்ளூர் கலாச்சார, பாரம்பரிய அறிவு மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலா திறன் மேம்படுத்தப்படும்.

கூட்டுறவு, சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றின் மூலம் வேளாண் வணிகங்கள் மேம்படுத்தப்படும். கிராம பஞ்சாயத்துகளின் உதவியுடன் மாவட்ட நிர்வாகத்தால் கிராம செயல் திட்டங்கள் உருவாக்கப்படும். மத்திய மற்றும் மாநில திட்டங்கள் 100% நிறைவு செய்வது உறுதி செய்யப்படும்.

சாலை இணைப்பு, குடிநீர், 24x7 மின்சாரம், சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் வசதி செய்து கொடுக்க கவனம் செலுத்தப்படும். ரூ. 4800 கோடி நிதி ஒதுக்கீட்டில் ரூ. 2500 கோடி சாலைகளுக்காக செலவிடப்படும்.


Full View


Similar News