கிடைக்கும் கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்குறாரே...? பிரதமர் மோடியால் கதறும் பிரிவினைவாதிகள்...!
இஸ்ரேலுக்கு கை கொடுத்து உள்நாட்டில் பிரிவினைவாதிகளுக்கு பிரதமர் மோடி கொடுத்த அடி...!
எல்லா போர்க்காலங்களில் ஒரே ஒரு நாடு தான் நடுவில் மாட்டிக்கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கும் அந்த வகையில் தற்போது காஸா முனை என்பது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் போர் பதற்ற நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது.
இரண்டு நாட்டின் எல்லை பகுதியில் அமைந்திருக்கும் காஸா பகுதி யாருக்கு சொந்தம் என்பது தான் இந்த போர் பதற்ற நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் இந்த பகுதியை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் தங்களுக்கு சொந்தமானதாக கருதி தங்களது கட்டுப்பாட்டில் வைத்து வருகின்றனர். ஆனால் இந்த ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் மக்கள் தீவிரவாதிகள் என கருதுகின்றனர் கட்டுப்பாட்டில் இருக்கும் மேற்கு கரையின் சில பகுதிகளை இந்த அமைப்பை சேர்ந்த முகமது அப்பாஸ் தலைமையில் ஆட்சி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவ்வப்போது பாலஸ்தீனத்தின் ஆயுதக் குழுக்களுக்கும் இஸ்ரேலின் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்கள் நடந்து வந்துள்ளது இந்த நிலையில் தற்போது இந்த மோதல் தீவிரமடைந்து இரண்டு நாட்டிற்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.
அதாவது திடீரென்று பாலஸ்தீனத்தின் எல்லையாக கருதப்படுகின்ற காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் நாட்டுக்குள் ஏவுகணைகள் விடப்பட்டதாகவும் அதற்கு இஸ்ரேல் ஸ்டேட் ஆப் வார் என்று அறிவிப்பை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இஸ்ரேல் இந்த அறிவிப்பை வெளியிட்டதுமே இரு நாடுகளுக்கும் இடையே உள்ள போர் தீவிரமடைந்து முன்பில்லாத அளவிற்கு அதிக உயிர் சேதத்தையும் பெருமளவில் இழப்பும் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் இஸ்ரேல் நாட்டிற்குள் ஹமா ஸ் தீவிரவாதிகள் சட்டவிரோதமாக நுழைந்து துப்பாக்கி சூடு நடத்துவதாகவும் அதனால் இஸ்ரேல் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அந்த நாட்ட அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் போர் தொடர்பான வீடியோக்களே தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த தகவல் உலக நாடுகள் அனைத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தற்போது தானே ரஷ்யா உக்கிரன் போர் விவகாரம் உச்சம் பெற்று இருந்தது.