காங்கிரஸ் ஆட்சியை காட்டிலும் சிறுபான்மையினருக்கு அதிகம் செய்த பாஜக - அசத்தும் மவுலான ஆசாத் திட்டம்!

Update: 2023-10-17 03:13 GMT

இந்தியாவில் உள்ள சிறுபான்மையின மாணவிகள் பொருளாதார வசதி இல்லாத காரணத்தினால் தங்களது படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் படிப்பை பாதியிலேயே கைவிடும் நிலைக்கு ஆளாகின்றனர். இதை தடுத்து அவர்கள் தொடர்ந்து படிப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் மவுலான ஆசாத் நேஷனல் ஸ்காலர்ஷிப் திட்டம். இது மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் கீழ் 1989ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மவுலானா ஆசாத் பெயரில் இந்த திட்டம் துவக்கப்பட்டது. முஸ்லிம், கிறிஸ்துவம், சீக்கியம், புத்தம் போன்ற சிறுபான்மை சமூகத்தில் உள்ள மாணவிகள் மட்டும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.

என்ன தகுதி இருக்க வேண்டும்?

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பிளஸ் 1 படிக்கும் மாணவிகள் மட்டும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வேறு எதாவது ஒரு கல்வி உதவித் தொகை பெறுபவர்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது. இத்திட்டத்தின் படி விண்ணப்பிக்கும் தகுதியுள்ள மாணவிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இத்தொகை பிளஸ் 1 படிக்கும் போது 6 ஆயிரம் ரூபாயும், பிளஸ் 2 படிக்கும் போது 6 ஆயிரம் ரூபாயும் என இருதவணையாக வழங்கப்படும். இத்தொகை மாணவிகளின் பள்ளிக் கட்டணம், புத்தகம், எழுதுபொருள், விடுதிக்கட்டணம் போன்றவற்றுக்காக வழங்கப்படுகிறது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

விண்ணப்ப படிவங்களை  www.maef.nic.in என்ற தளத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். விண்ணப்பக்கட்டணம் எதுவுமில்லை. மாணவிகள் தாங்கள் படிக்கும் பள்ளி முதல்வரிடம் சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மத்திய அரசின் இணைய தளத்தில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற வழிமுறைகள் உள்ளது. 

பாஜக ஆட்சிக்கு பின் 

திட்டம் தொடங்கப்பட்ட காலம் முதல் 2014வரை இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி 50 கோடியை தாண்டவில்லை. 2014 பாஜக ஆட்சி அமைந்த பிறகு முதல் முறையாக 50 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டு, 2018ல் அது 100 கோடியை தாண்டியது. 




 

Similar News