மோடி சொன்னார் செய்தார்...! கெத்து காட்டும் 'ஆபரேஷன் அஜய்'
அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் பயங்கரவாத குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் முண்டது, பயங்கரவாதிகளின் தாக்குதலில் 1300'க்கும் மேற்பட்ட இஸ்திரேலியர்கள் கொல்லப்பட்டனர், அவர்களின் பெரும்பாலானோர் அப்பாவிகள். மேலும் பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட பலரை பிணை செய்திகளாக வைத்துள்ளனர் தீவிரவாதிகள். இந்த நிலையில் இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அங்குள்ள பதட்ட சூழலில் இந்திய மக்களை எப்படி காப்பாற்றுவது என யோசித்த பொழுது இந்தியர்களுக்கு உதவி செய்யப்படும் என 'ஆபரேஷன் அஜய்' திட்டத்தை பிரதமர் மோடியின் அமைச்சகம் அறிவித்தது.
இதன்மூலம் இஸ்ரேலில் உள்ள சுமார் 18000 இந்தியர்கள் தாயகம் திரும்ப 'ஆப்ரேஷன் அஜய்' திட்டம் கடந்து வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது, இந்த 'ஆப்ரேஷன் அஜய்' மூலம் மூன்று விமானங்களில் 644 இந்தியர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர், 'ஆப்ரேஷன் அஜய்' திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 197 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு மூன்றாவது விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் டெல்லியை வந்து அடைந்தது, இஸ்ரேலில் இருந்து வந்த இந்தியர்களை டெல்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் கௌசல் கிஷோர் வரவேற்றார்.
அப்போது மத்திய அமைச்சர் கிஷோர் கூறும் பொழுது, 'பிரதமர் மோடி வெளியுறவு அமைச்சகத்திற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி நாட்டின் குடிமக்களுக்காக அர்ப்பணிப்புடன் இருக்கிறார், இந்திய குடிமக்கள் இஸ்ரேலில் இருந்து பாதுகாப்பாக இங்கு அழைத்து வரப்படுகின்றனர். அவர்கள் தங்கள் நாடான இந்தியாவில் வந்து இறங்கியவுடன் இந்தியா தான் எங்களை காப்பாற்றியது என்ற உணர்வுடன் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளனர்' எனக் கூறியுள்ளார். அதற்கு முன்னதாக சனிக்கிழமை வந்த இரண்டாவது விமானத்தில் சுமார் 28 தமிழர்கள் உட்பட 235 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.