இது என்னடா தமிழை வளர்த்த அரசியல் தலைவர்களுக்கு வந்த சோதனை..? மொத்தமாக முடித்துவிட்ட கோபி, சுதாகர்...!

Update: 2023-10-24 14:38 GMT

தமிழ் வளர்த்த அரசியல் தலைவர்கள் பரிதாபங்கள்...!

தமிழ்நாட்டில் அதுவும் கடந்த 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் வரலாற்றில் மொழியையும் தமிழ்நாட்டு அரசியலையும் பிரிக்க முடியாது!

60களின் துவக்கத்தில் இருந்து தமிழ்நாட்டில் ஆண்ட காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகம் மொழி அரசியலை தான் பிரதானமாக செய்து வந்தது, தமிழ் மொழி எங்கள் மூச்சு! தமிழ் மொழி எங்கள் உணர்வு! தமிழ் மொழியை பழித்தால் தாய் தடுத்தாலும் விடமாட்டேன் என்பது போன்ற முழக்கங்களை முன்வைத்து தமிழ் மொழியை பிரதானமாக வைத்து அரசியல் செய்து வந்ததில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது.

அப்படி தமிழக அரசியல் களம் கடந்த 60 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் தமிழர் பண்பாடு! தமிழ் மொழி! தமிழர் நாகரிகம் என்பது குறித்து செய்து வந்த அரசியல் தற்பொழுது எந்த அளவிற்கு வந்து நிற்கிறது என சமீபத்தில் வெளியான ஒரு youtube சேனலின் வீடியோவில் சித்தரித்துள்ளது குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.

பரிதாபங்கள் எனப்படும் youtube சேனல் அவ்வப்போது ட்ரெண்டிங் வீடியோக்களை பதிவேற்றுவதில் சிறந்தவர்கள், அதில் வரக்கூடிய கோபி, சுதாகர் இருவரும் அப்போது என்ன விஷயம் டிரெண்டிங் ஆக இருக்குமோ அந்த விஷயத்தை எல்லாம் வைத்து அவற்றை கிண்டலாக்கி வீடியோ வெளியீடு வருகிறார்கள்.

குறிப்பாக இவர்கள் விடியோவை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதும், இவர்கள் வீடியோ இணையத்தில் மீம் மெட்டிரியலாக உலா வருவதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடக்கு ரயில் பாவங்கள் வெளியிட்டது மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆனது, அதேபோன்று தற்பொழுது வெளியிட்ட வீடியோ ஒன்றில் தமிழ், தமிழர், தமிழ் உணர்வு, தமிழ் மொழி பற்று என இத்தனை ஆண்டுகளாக தமிழக அரசியல் எந்த அளவிற்கு பரிணாமத்தை எட்டி உள்ளது என சித்தரித்து ஒரு காட்சியை வைத்துள்ளது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

அந்த வீடியோவில் கோபியும், சுதாகரும் விஜயதசமி பண்டிகைக்கு குழந்தைக்கு நெல்லில் ‘அ’ என்ற முதல் எழுத்தை எழுத கற்றுக் கொடுக்கும் ஒரு காட்சியை வடிவமைத்து இருப்பார்கள். அதில் கோபி 'எழுதுங்கோ தமிழில்' என கூறும் பொழுது சுதாகர் ஏ.பி.பி.ஏ அப்பா என ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தையை எழுதுவார்.

இந்த காட்சியை குறிப்பிட்டு கடந்த 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தமிழ்! தமிழர் உணர்வு! தமிழ் மரபு! தமிழ் மொழி என்றெல்லாம் பேசி அரசியல் செய்து வந்த கட்சிகள் இந்த அளவிற்கு கொண்டு வந்து விட்டிருக்கின்றன, இதுதான் இத்தனை ஆண்டுகால தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு! இந்த அளவிற்கு தான் தமிழ் மொழி தமிழ்நாட்டில் இருக்கிறது என பல விமர்சனங்கள் இணையத்தில் குவிந்துவருகிறது.

இது மட்டும் அல்லாமல் இந்த வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது, இது மட்டுமல்லாமல் அதில் ஒரு வசனத்தை வேறு கோபி பேசியிருப்பார் இவ்வளவு தமிழ் வளர்த்த தலைவர்களின் புகைப்படத்தை வீட்டில் மாட்டி வைத்துவிட்டு தமிழை எழுதத் தெரியாமல் இருக்கிறாயே என்பது போன்ற வசனம் பேசுவார், அதனை குறிப்பிட்டு 'இன்று தமிழ்நாட்டில் தமிழை வளர்க்கிறேன் எனக் கூறிய பல அரசியல்வாதிகளின் படங்களை வீட்டில் வைத்துள்ளவர்களின் நிலைமை இதுதான், தமிழை எழுத கூட தெரியாத அளவிற்கு இன்றைக்கு பல பேர் இருக்கிறார்கள்' என்றெல்லாம் வேறு விமர்சனங்கள் கொடி கட்டி பறக்கிறது.

ஒட்டுமொத்தமாக இந்த ஒரு வீடியோவில் கோபியும், சுதாகரும் தமிழகத்தில் தமிழை வளர்க்கிறேன் எனக்கூறிய அரசியல்வாதிகள் இன்று எந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள் என அப்பட்டமாக கூறிவிட்டார்கள் என பல கமெண்டுகள் பறக்கின்றன...

Similar News