'வருகிறது ராம ஜென்ம பூமி!' பத்தாண்டுகளில் பல வருட போராட்டத்தை முடித்துக்காட்டிய விஷ்வகுரு..
வரலாற்றை நிகழ்த்தப் போகும் ராம ஜென்ம பூமி! அனைத்தும் தயார்...!
நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு உத்தர பிரதேச மாநில அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது, கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கும் இந்த ராமர் கோவில் பற்றிய பல தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு அரசு சார்பில் ஸ்ரீ ராமஜன்ம பூமி தீர்த்த சேத்ரா என்னும் அறக்கட்டளை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அறக்கட்டளை தான் ராமர் கோவில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது, இந்த கோவில் தலைமை கட்டிட கலைஞர் சந்திரகாந்த் பாய் சோம்புரா வடிவமைத்தபடி மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீ ராமர் கோவில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட உள்ளதாக உத்திரபிரதேச அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் இதன் காரணமாக வேகப்படுத்தப்பட்டுள்ளன, ராமர் பிறந்த இடமான அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ஸ்ரீ ராமபிரானுக்கு பிரம்மாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது! இது கோவிலின் பூமி பூஜை 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி நடைபெற்றது பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கோவில் கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த கோவிலில் சூரியன், விநாயகர், சிவன், துர்க்கை, ப்ரம்மா ஆகியோர் சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளன. 1800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் இந்த பிரம்மாண்ட ராமர் கோவில் மொத்தம் 2.7 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகும். இதில் 57,400 சதுர அடியில் கோவில் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று அடுக்குகளை கொண்ட இந்த கோவிலின் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், இரண்டாவது தளத்தில் 74 அறைகளும் உள்ளது.
இந்த கோவிலுக்கு மொத்தம் 12 நுழைவு வாயில்கள் உள்ளன. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு ராமஜென்ம பூமியின் ராம் மந்திர் தீர்த்த சேத்திர அழைப்பை ஏற்றுக்கொண்டார், ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி மாதம் 2024 ஆம் ஆண்டு 22 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் 'இன்று உணர்வுகள் நிறைந்த நாள்! ஸ்ரீ ராமஜன்ம பூமி தீர்ப்பு அறக்கட்டளையின் அதிகாரிகள் என்னை சந்திக்க எனது இல்லத்திற்கு வந்திருந்தனர். ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி அயோத்திக்கு வருமாறு அவர்கள் என்னை அழைத்துள்ளனர். நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன், என் வாழ்நாளில் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நான் காண்பது எனது அதிர்ஷ்டம்' என பதிவிட்டுள்ளார்.