மீண்டும் வேலையை காட்டிய அறநிலையத்துறை! சத்தமில்லாமல் கப்சுப் என அடங்கிய சேகர்பாபு...
அடுத்த வேலையை ஆரம்பித்த அறநிலையத்துறை...! பின்னணியில் யார்?
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததற்கு பிறகு இந்து சமயம் மற்றும் இந்து சமய அடையாளங்கள் மாற்றப்பட்டு வருவதாக வலதுசாரி அமைப்புகள் பல புகார் தெரிவித்து வந்தனர். குறிப்பாக கூற வேண்டும் என்றால் திருவள்ளுவர் படத்தை பகிரும் பொழுது விபூதி இல்லாமல் இருப்பது அதனை தொடர்ந்து சமுதாய ரீதியிலான தலைவர்கள் படத்தை பகிரும் பொழுது நெற்றியில் விபூதி இல்லாமல் இருப்பது என பல்வேறு விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன.
தேவரின் குருபூஜைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட யாரும் அங்கு விபூதி அணியவில்லை என்பது வேறு சமூக வலைதளத்தில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலும் அடிக்கடி அமைச்சர் சேகர்பாபு நாங்கள் ஆன்மீகத்துக்கு எதிரி அல்ல எனக் கூறும் நிலையில் மற்றும் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை மொபைல் செயலியில் எப்பொழுதும் கம்பீரமாக வீற்றிருக்கும் கோவில் கோபுரம் சின்னம் அகற்றப்பட்டுள்ளது எனக்கூறி தற்பொழுது சர்ச்சை எழுந்துள்ளது. தமிழக அரசு சார்பில் தற்பொழுது ஒவ்வொரு துறைக்கும் பிரத்யோக செயலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவைகள் பயன்பாட்டில் இருக்கின்றன.
பொதுப்பணித்துறைக்கு ஒரு செயலி, அது மட்டுமல்லாமல் தமிழக அரசு ஆவணங்களை பெறுவதற்கு ஒரு செயலி, தமிழக அரசு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு ஒரு செயலி என பல்வேறு செயலிகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் இந்து சமய அறநிலை துறை சார்பில் உருவாக்கப்பட்ட மொபைல் செயலியில் தமிழ்நாடு அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் சின்னம் அகற்றப்பட்டது என சர்ச்சை எழுந்தது.