ஒரேடியா எல்லாம் போக போகுதாமே.. அலறி துடித்த திருமாவளவன்!
கடந்த 2014 ஆம் ஆண்டில் பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளில் தேர்தல்களில் குற்றவாளிகள் போட்டியிடுவதை தடுப்பதற்காக தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதில் பாஜக உறுதியாக உள்ளது பிற கட்சிகளுடன் கலந்து பேசி ஒரே நேரத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலை நடத்தும் முயற்சியை உருவாக்க பாஜக முயற்சிக்கும். இது அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவினத்தை குறைக்கும் ஆதலால் இந்த நடைமுறை எதார்த்த அடிப்படையில் தேர்தல் செலவின வரம்புகளை திருத்துவது குறித்து ஆராய்வோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு அடுத்து பாஜக தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சி அமைத்ததில் இருந்து ஒரே நாடு ஒரே தேர்தலில் தனது கவனத்தை செலுத்த அதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் எதிர்ப்பும் முன் வைக்கப்பட்டது. ஆனால் இது குறித்த சாத்தியக்கூறிகளை ஆராய்வதற்கு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு ஒன்று அமைத்து ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
சில தரப்புகளிடமிருந்து இந்த தேர்தல் நடைமுறைகளுக்கு வரவேற்கத்தக்க கருத்துகளும் சில தரப்புகளிடமிருந்து அதிலும் குறிப்பாக I.N.D.I.A கூட்டணி கட்சிகளிடமிருந்து ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து எதிர்ப்புகளும் தற்போது வரை வலுப்பெற்று உள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசிற்கு அதாவது தனது கூட்டணி கட்சியான திமுகவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதாவது நவம்பர் 1இல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாள்: மத்திய - மாநில உறவுகளை ஆய்வுசெய்ய ஆணையம் அமைக்க வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்! எனவும், மாநில உரிமைகள் பெருமளவில் பறிக்கப்படும் இன்றைய சூழலில் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவை ஆராய்ந்து பரிந்துரைகள் செய்வதற்கு ஆணையம் ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.