'இதுதான் சனாதன தர்மம்' கெத்து காட்டிய ரிஷி சுனக் - கதறல் ஸ்டார்ட்.....

Update: 2023-11-11 03:20 GMT

சனாதனத்தை தூக்கி பிடிக்கும் கனடா பிரதமர்...! கதறலை துவங்கிய திராவிடியன் ஸ்டாக்குகள்...!

சனாதன தர்மத்தை ஒழிப்போம், சனாதன தர்மம் என்பது ஒழிக்கப்பட வேண்டியது என்றெல்லாம் தமிழகத்தில் திராவிடியன் ஸ்டாக்குகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இது மட்டும் அல்லாமல் திராவிடர் கழக பின்புல திமுக வேறு சனாதன தர்மத்தை ஒழிப்போம் என வெளிப்படையாகவே அறிவித்துவிட்டது, அறிவித்துவிட்டது மட்டுமல்லாமல் தேசிய அளவில் எதிர்ப்புகள் வந்த பொழுதும் 'என்னால் சனாதனத்தை ஒழிப்பேன் என கூறியதில் இருந்து மன்னிப்பு கேட்க முடியாது, என்னால் அந்த கருத்தை வாபஸ் வாங்க முடியாது' என திமுகவின் அமைச்சரும் முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

இப்படி சனாதன விவகாரத்தில் எதிர்ப்பு நிலையில் திமுக அரசு உறுதியாக இருப்பதை கண்டு பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் உலக அளவில் சனாதன தர்மம் கொடி கட்டி பறக்கிறது. ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக இருப்பவர் இந்திய வம்சாவளி இந்து சமய குடும்பத்தை சார்ந்தவர், மேலும் இவர் இன்போசிஸ் இணை நிறுவன ர் நாராயண மூர்த்தியின் மகன் அக்ஷதா மூர்த்தியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மேலும் ரிஷி சுனக் அவர்களுக்கு இந்து மதத்தின் வழிபாடுகள் குறிப்பாக சனாதன தர்மத்தின் மீது அபார நம்பிக்கை உள்ளது. மேலும் தன்னுடைய வெற்றிக்கு காரணம் பகவத்கீதைதான், அதாவது அடிக்கடி நான் பகவத் கீதையை படிப்பேன் அதில் உள்ள கருத்துக்கள் என் வாழ்வில் முன்னேற்றத்திற்கு உதவுகின்றன என்ன ஏற்கனவே கூறியுள்ளார். மேலும் பிரிட்டனில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு அவர் அடிக்கடி சென்று பயபக்தியுடன் சாமி கும்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல் சமீபத்தில் ஜி20 மாநாட்டிற்காக அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு கனடா சார்பில் வந்திருந்த ரிஷி சுனக் உனக்கு டெல்லியில் உள்ள இந்து ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்தார், அது மட்டுமல்லாமல் அங்குள்ள ரிஷிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

இப்படி சனாதன தர்மத்தை தீவிரமாக கடைபிடிக்கும் பிரிட்டன் பிரதமர் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இந்தியாவில் வரும் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது, குறிப்பாக வடமாநிலங்களில் பெரும் கொண்டாட்டமாக தீபாவளி பண்டிகை 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நான்கு நாட்கள் கொண்டாடப்படும்.

இந்த நிலையில் பிரிட்டிஷ் பிரதமரான ரிஷி சுனக் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று இரவு கோலாகலமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார். இதில் பிரிட்டனில் வசிக்கும் குறிப்பாக பிரிட்டனில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர், அங்கு குத்துவிளக்கு ஏற்றி தீபாவளியை மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டாடினார்கள் ரிஷி சுனக் தம்பதியினர்.

அதன் பிறகு அங்கு வந்திருந்தவர்களுக்கு தீபாவளி இனிப்பு பரிமாறப்பட்டது, இந்த கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாக பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த பதிவில் ரிஷி சுனக் இந்து சமய மக்களுக்கு தீபாவளி வாழ்த்தும் தெரிவித்துள்ளார், அந்த தீபாவளி வாழ்த்து செய்தியில், 'தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் ரிஷி சுனக் இன்று இரவு இந்து சமுதாயத்தை சேர்ந்தவர்களை டவுனிங் தெருவுக்கு அழைத்து தீபாவளியை கொண்டாடினார். பிரிட்டன் மட்டுமின்றி உலகம் முழுவதும் தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் சுபமான தீபாவளி வாழ்த்துக்கள்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சனாதனத்தை ஒழிப்பேன் என ஒரு சில திராவிடியன் ஸ்டாக்குகள் கூறிவரும் நிலையில் உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற தலைவர்களே என்று சனாதன தர்மத்தை கொண்டாடி போற்றும் இந்த தருணத்தை கண்டு சிலருக்கு பொறாமையாகவும், வயிற்று எரிச்சலாவுக்கும் இருப்பதாக இணையத்திற்காக கமெண்டுகள் பறக்கின்றன.

Similar News