கெத்து காட்டும் வந்தே பாரத்... கப்சுப் என வாயடைத்துப்போன திராவிடியன் ஸ்டாக்குகள்

Update: 2023-11-12 04:27 GMT

வந்தே பாரத் ரயில் விவகாரத்தில் ஏற்பட்ட திருப்பம்.... கதறும் திராவிடியன் ஸ்டாக்குகள்...

சென்னை முதல் நெல்லை வரை தமிழகத்தில் முதல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது.

இந்த வந்தே பாரத் ரெயில் துவங்கப்பட்ட சமயத்தில் இடதுசாரிகள் அதுவும் குறிப்பாக திமுக கூட்டணியில் இருக்கக்கூடியவர்கள் இந்த வந்தே பாரத் ரெயில் எல்லாம் எதற்கு? தேவை இல்லை! ரயில் கட்டணம் அதிகமாக உள்ளது! இந்த கட்டணத்தில் பிளைட்டிலேயே சென்றுவிடலாம்! ஏன் இதெல்லாம்? என்பது போன்ற பல விமர்சனங்களை முன் வைத்தனர்.

அதுவும் குறிப்பாக இந்த ரயில் சேவையை துவங்கி வைத்தது பிரதமர் மோடி என்பதால் இந்த சென்னை நெல்லை வந்தே பாரத் விமர்சனங்கள் திமுக கூட்டணி தரப்பிலிருந்து அதிகமாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தே பாரத் ரயிலை விமர்சித்து அதனை மட்டம் தட்டுவது போன்று தனது சமூக பல பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

தனது எக்ஸ் பதிவில் அவர் குறிப்பிடும் பொழுது 'தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரு நாட்களிலேயே சாமானிய மக்கள் பயன்படுத்தக்கூடிய பொதிகை, பல்லவன் உள்ளிட்ட விரைவு ரயில் வேகம் குறைக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது முற்றிலும் சிதைப்பது எனும் ஒன்றிய அரசின் தொடர் நடவடிக்கை மற்றொரு வடிவமாகவே மக்கள் இதனை பார்க்கின்றனர். குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயண கட்டணமே தவிர சாமானிய மக்கள் பயணிக்கின்ற மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்' என குறிப்பிட்டார்.

இப்படி வந்தே பாரத் ரயிலை திமுக கூட்டணி கட்சியினர் பிரதமர் மோடி துவங்கினார் என்ற ஒரே காரணத்துக்காக கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தற்பொழுது இதற்கு மக்களே பதிலடி கொடுக்க துவங்கிவிட்டனர். நாளை கொண்டாடப்படவிற்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்ல ஆம்னி பேருந்துகள் கட்டணம் அதிகமாக இருக்கிறது என அவதிப்பட்டு வந்த பயணிகளுக்கு வந்தே பாரத் ரயில் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது.

இந்த வந்தே பாரத் ரெயில் மிகவும் உபயோகமாக இருக்கிறது, காலை டிபனுக்கு சென்னையிலிருந்து கிளம்பினால் மதிய லஞ்சுக்கு திருநெல்வேலி வந்து விடுகிறோம். அந்த அளவிற்கு மிகவும் சொகுசாகவும், மிகவும் பிராயணம் அமைதியாகவும் இருக்கிறது இதுபோன்ற வந்தே பாரத் ரெயில் இன்னும் அதிகமாக தேவை என பொதுமக்கள் தற்பொழுது வந்தே பாரத் ரயிலை அதிக அளவில் வரவேற்க துவங்கி விட்டனர்.

இப்படி வந்தே பாரத் ரயில் ரெயில் சேவையை பிரதமர் மோடி துவங்கினார் என்பதற்காக அதனை விமர்சித்து வந்த இடதுசாரிகளுக்கு மக்களின் இந்த வரவேற்பு முகத்தில் கரியை பூசியது போல் ஆகிவிட்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளது. வந்தே பாரத் ரெயிலை நாம் கிண்டல் செய்கிறோம் மக்கள் என்னடா என்றால் கொண்டாடுகிறார்கள் என இடதுசாரிகள் புலம்பதுவங்கிவிட்டனர். திமுக கூட்டணி கட்சியினர் வந்தே பாரத் ரயில் விமர்சித்ததை பொதுமக்கள் இனி கேலியாக பார்ப்பார்கள் எனவும் கமெண்ட்கள் பறக்கின்றன.

Similar News