வான்டட்டாக வந்து சிக்கிய தாய் சிறுத்தை... வச்சு செய்யப்போகும் காவிகள்....

Update: 2023-11-15 02:23 GMT

விபரீதம் தெரியாமல் வார்த்தையை விட்டு சிக்கிய திருமாவளவன்... சம்பவம் செய்ய காத்திருக்கும் பாஜக...

தமிழகத்தில் அண்ணாமலை நடத்தி வரும் 'என் மண் என் மக்கள்' யாத்திரை குறித்து திருமாவளவன் விவரம் அறியாமல் பேசியதுதான் தற்பொழுது திருமாவளவனுக்கே வினையாக முடிந்து விட்டது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜகவினர் தமிழக முழுவதும் இருக்கக்கூடிய 234 தொகுதிகளையும் குறி வைத்து யாத்திரை நடத்தி வருகிறது.

'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் ராமேஸ்வரத்தில் துவங்கப்பட்ட யாத்திரை மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என தென் மாவட்டங்களை முழுவதும் முடித்து அடுத்தபடியாக கொங்கு பகுதியான கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை என கொங்கு பகுதியை முடித்து தற்பொழுது தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் நுழைந்துள்ளது.

திருச்சி மாநகரை முடித்துவிட்டு யாத்திரை அடுத்தபடியாக காவிரி டெல்டாவை நோக்கி வரவிருக்கிறது, இந்த நிலையில் யாத்திரை பற்றி விமர்சிக்கிறேன் என்ற பெயரில் கடந்த வாரத்தில் திருமாவளவன் கூறியதுதான் தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவினர் நடத்தும் யாத்திரையால் பயன் எதுவும் இல்லை, அண்ணாமலை நடத்தும் யாத்திரையில் அதிமுக, பாமகவினர் கலந்து கொள்கிறார்கள் என திருமாவளவன் கடந்த வாரம் கூறினார். இதற்கு யாத்திரையிலேயே அண்ணாமலை பதிலடி கொடுத்தார், 'திருமாவளவன் புரியாமல் பேசுகிறார்! யாத்திரையில் அதிமுகவினர், பாமகவினர் கலந்து கொள்கிறார்கள் என்பது உண்மை இல்லை. திருமாவளவன் வேண்டுமானால் யாத்திரையில் வந்து பார்க்கட்டும்' என அண்ணாமலை சவால் விடுத்திருந்தார்.

மேலும் இதுகுறித்து விமர்சனங்கள் வேறு எழுந்துள்ளது. அதாவது தற்சமயம், அதிமுக, பாமக கட்சி பாஜக கூட்டணியிலேயே இல்லை, இன்னும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அறிவிக்கப்படவில்லை. அப்படி இருக்கும் சமயத்தில் திருமாவளவன் அதிமுக, பாமகவினர் எப்படி வந்து யாத்திரையில் கலந்து கொள்வார்கள்? என கேள்வியும் எழுந்தது.

இந்த நிலையில் பாஜகவின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா வேறு திருமாவளவனுக்கு ஓபன் சேலஞ்ச் ஒன்று விடுத்திருக்கிறார். அதாவது பாஜக யாத்திரையில் அதிமுகவினர், பாமகவினர் அதிகம் இருப்பதாக திருமாவளவன் சொன்னது உண்மைதானா? என SG .சூர்யாவிடம் கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு, SG சூர்யா கூறிய பதிலாவது 'விசிகவினர் வலிமையாக இருப்பதாக சொல்லப்படும் சிதம்பரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் யாத்திரை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு வரும்பொழுது திருமாவை கட்டாயம் அழைக்கிறோம் அல்லது மற்ற கட்சியினர் இருக்கிறார்களா என்பதை அவரை நேரில் வந்து பார்க்கட்டும். யாத்திரைக்கு கிடைத்த செல்வாக்கால் தான் எங்கள் மீது இத்தனை அடக்குமுறைகள் ஏவப்படுகிறது. அதுதான் உண்மை' எனக் கூறியுள்ளார்.

இப்படி பாஜகவினர் யாத்திரையில் திருமாவளவன் வந்து கலந்து கொண்டு பார்க்கட்டும் அதன் பிறகு உண்மையை உலகிற்கு சொல்லட்டும் என்று சவால் பாஜகவினர் சவால் விடுத்திருப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதுவும் குறிப்பாக சிதம்பரம், கடலூர் போன்ற பகுதிகளை யாத்திரை நெருங்கி வருவதால் கண்டிப்பாக அங்கு வரும் பொழுது திருமாவளவன் கடுமையாக விமர்சிக்கப்படுபவர் எனவும், அதுவும் குறிப்பாக 2019 ஆம் ஆண்டு தேர்தலில் சிதம்பரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமாவளவனுக்கு சிதம்பரத்தில் வைத்தே அந்த தொகுதியில் அவர் என்ன செய்தார் என்பதை அதே தொகுதியில் வைத்து மக்களுக்கு உண்மை வெளிச்சம் போட்டு காட்டப்படும் எனவும் பாஜகவினர் சவால் விடுத்து வருகின்றனர்.

தேவையில்லாமல் பாஜகவை சீண்டி தற்போது திருமாவளவன் அவரது தொகுதி மக்கள் முன்னிலையில் அந்த தொகுதிக்கு அவர் எதுவும் செய்யவில்லை என்ற உண்மை உடைபட போகிறது இது தேவையில்லாமல் அவர் தேடிக்கொண்ட வினை என அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Similar News