அண்ணாமலை குறித்த தேதி... அலறிப்போய் யூ டர்ன் அடித்த திமுக அரசு... அந்த அளவுக்கு பயம்!

Update: 2023-11-18 13:54 GMT

தேதி குறித்த அண்ணாமலை... திமுக அரசு உடனடியாக போட்ட யூ டர்ன்....

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 'செய்யாறு சிப்காட் மூன்றாவது அலகு' விரிவாக்க திட்டத்திற்காக 3174 ஏக்கர் விளைநிலங்கள் சட்டத்துக்கு எதிரான முறையில் பறிக்கப்படுவதாக குற்றம் சாட்டி மேல்மா என்கின்ற கிராமத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தங்களது வாழ்வாரம் பாதிக்கப்படுவதாகவும், விலை நிலங்களை அரசு எடுத்துக் கொள்ள இருப்பதாகவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

125 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். மேல்மா, குரும்பூர், காட்டுக்கொடி, காட்டுகுடிசை, நர்மாபள்ளம் உள்ளிட்ட 11 கிராமங்களை சேர்ந்த விவசாய நிலங்கள் அனைத்தும் முப்போகம் விளைச்சல் தரக்கூடியவை. இவை அனைத்தையும் அரசு கையகப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்களும், விவசாயிகளும் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டாம் தேதி நிலத்தை கையகப்படுத்த கூடாது எனவும், சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி குடியுரிமை உள்ளிட்ட அடையாள ஆவணங்களை வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைப்பதற்காக ஊர்வலமாக சென்றனர். ஊர்வலமாக மக்களும், விவசாயிகளும் செல்வதை அறிந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அதன்பின் அங்குள்ள தனியார் மண்டபம் ஒன்றில் அந்த 11 கிராமங்களை சேர்ந்தவர்களும் அடைத்து வைக்கப்பட்டனர், இதனையடுத்து அன்று மாலையே கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கிறோம் எனக் கூறிதான் அடைத்து வைத்துள்ளனர். ஆனால் மண்டபத்தை விட்டு வெளியேறச் சொல்லியும் போலீசார் எச்சரித்துள்ளனர் என தகவல்கள் கிடைக்கின்றன.

ஆனால் விவசாயிகள் மண்டபத்தை விட்டு வெளியேற மறுத்ததோடு அங்கேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இதன் எதிரொலியாக 147 விவசாயிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதோடு விடாமல் கடந்த நான்காம் தேதி விடியற்காலை போராட்டத்தை முன்னின்று நடத்திய அருள் என்பவர் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் எஸ்.பி கார்த்திகேயன் பரிந்துரையின் படி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஏழு பேர் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியர் முருகேசன் உத்தரவிட்டது அங்குள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து குண்டாஸ் சட்டத்திற்கு எதிராக மக்கள் அனைவரும் கொதித்து எழுந்தனர், இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக சார்பில் திருவண்ணாமலையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். இது குறித்து என் மனம் என் மக்கள் யாத்திரையில் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.


இப்படி அண்ணாமலை இறங்குகிறார் என தெரிந்ததுமே திமுக அரசு இந்த விவகாரத்தில் முன்வைத்த காலை பின் வைத்துள்ளது, செய்யாறு சிப்காட் அமைப்பதற்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஆறு பேர் மீதான குண்டாஸ் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பெயர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது, இதன் பின்னணியில் அனைத்து கட்சியினர் மத்தியிலும் ஏற்பட்ட எதிர்ப்பு, மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி, போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் போடுவது சர்வாதிகார மனநிலை தான் காரணம் என ஏற்பட்ட விமர்சனம்தான் எனவும் இது எல்லாவற்றையும் எல்லாம் தாண்டி பாஜக இதை கையில் எடுத்து போராடுகிறது என்றவுடன் திமுகவிற்கு ஏற்பட்ட பயம் தான் காரணம் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அண்ணாமலை போராட்டம் அறிவித்த 24 மணி நேரத்திற்குள் குண்டாஸ் சட்டத்தை வாபஸ் வாங்கும் அளவிற்கு அறிவாலயம் நடுங்கிப் போய் உள்ளதாகவும் கருத்துக்கள் எழுந்துள்ளன.

Similar News