உதயநிதியை வைத்தே டெல்லி மேலிடம் போட்ட ஸ்கெட்ச்! வேற லெவல் பிளானில் சிக்கப்போகும் மொத்த கூடாரம்....
உதயநிதியை வைத்தே பிரதமர் மோடி போட்ட ஸ்கெட்ச்! மொத்த கூட்டணியும் சிக்க போகும் ரகசியம்...
தமிழக முதல்வரின் மகனும் தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சினிமா மூலம் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி அரசியல் வேண்டாம் என்று கூறிவிட்டு தற்போது அரசியலில் குதித்து ஒரு அமைச்சராகவும் தமிழகத்தின் துணை முதலமைச்சர் போன்று வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அரசியலை கற்றுக் கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், 'மாநாட்டின் தலைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் ஒழிப்பு மாநாடு என்று போட்டு உள்ளீர்கள் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஒரு சிலவற்றை நாம் கண்டிப்பாக அறவே ஒழித்தாக வேண்டும் டெங்கு கொசு மலேரியா கொரோனா இவற்றினான் எதிர்க்க கூடாது ஒழிக்கத்தான் வேண்டும் அதேபோன்றுதான் இந்த சனாதனம் எதிர்ப்பதை விட ஒழிப்பதே மிக முக்கிய மற்றும் நமது முதல் காரியம். நாம் எல்லோரும் படித்து விடக்கூடாது என்பதே சனாதன கொள்கை! குழந்தை திருமணம் உடன்கட்டை ஏறும் வழக்கம் இவை அனைத்தையும் கொண்டு வந்தது சனாதனம் என்ற தவறான கருத்துக்களை முன்வைத்தது மட்டுமின்றி தொடர்ந்து நான் சனாதனத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் இறங்குவேன்' என்று அவர் தெரிவித்ததற்கு நாடு முழுவதும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் முன்வைக்கப்பட்டது.
இதுகுறித்து அவர்களின் எதிர்க்கட்சி கூட்டணியிலும் திமுக தரப்பிற்கு ஆதரவற்ற சூழ்நிலையே நிலவியது. அதுமட்டுமல்லாமல் நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் உதயநிதி சனாதன ஒழிப்பு கருத்திற்கு வழக்குகள் பதியப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிப்பதற்கும் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து உதயநிதி மற்றும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் விடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
உதயநிதி கூறியிருந்த இந்த சனாதன ஒழிப்பு கருத்து வைத்து தற்போது லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரங்கள் பாஜக தரப்பில் முன் வைக்கப்படுகிறது. உதயநிதி கூறிய சனாதனத்தை வைத்து ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலின் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது பாஜக. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் அதன் பிரச்சாரம் பாஜக தரப்பில் நேற்று நடைபெற்றது அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு காங்கிரஸ் தரப்பிற்கு தலையில் இடியை இருக்கும் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அதாவது இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ராஜஸ்தானின் பங்கு மற்றும் வளர்ச்சி மிக முக்கியம் ஆனால் I.N.D.I.A கூட்டணி சனாதனத்தை ஒழிக்க நினைக்கிறது சாதனத்தை ஒழிப்பது என்பது ராஜஸ்தானின் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு சமமாகும். சனாதனன் குறித்து காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று பேசினார்.
இப்படி மொத்தமாக ஐந்து மாநிலங்களின் தேர்தல் பிரச்சாரங்களில் இதனையே பாஜக முன்னிறுத்தி வருகிறது. கண்டிப்பாக இதுவும் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது எனவும் அதன் எதிரொலியும் தேர்தல்களில் வெளிப்படும் எனவும் தெரிகிறது. அப்படி இந்த பிரச்சாரம் அனைத்தும் தேர்தல்களில் பாஜகவிற்கு சாதகமான நிலையை பெற்று கொடுத்து விட்டால் கண்டிப்பாக இது திமுக கூட்டணிக்கு பெரும் இடியாக இருக்கும். குறிப்பாக உதயநிதி பேசியதை காரணமாக வைத்தே திமுகவை I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலக்கி விடுவார்கள் என விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது...