அட லேட்டஸ்டா மக்களிடம் சிக்கினது கனிமொழியா? கன்னியாகுமரி மக்கள் செய்த சிறப்பான சம்பவம்...
வசமா சிக்கிட்டாங்களாமே கனிமொழி? கன்னியாகுமரி மக்கள் செய்த சம்பவம்....
கடந்த சில மாதங்களாக திமுக கூட்டணி எம்பிகள் மக்கள் மத்தியில் செல்லும் பொழுது அவர்களை மக்கள் நிறுத்தி கேள்வி கேட்பது தொகுதிக்கு என்ன செய்தீர்கள்? எங்கே சென்றீர்கள் இவ்வளவு நாளா ஏன் வரவில்லை? ஓட்டு வாங்கிய போது பார்த்தது, அதற்குப் பிறகு உங்களை பார்க்க முடியவில்லை! என்கின்ற கேள்வியை தொடர்ச்சியாக எழுப்பி வருகின்றனர்.
திருச்சியில் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டு இதுபோல் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது, அதனை தொடர்ந்து சிதம்பரம் எம்.பி திருமாவளவனிடம் கடந்த 10 தினங்கள் முன்பு செய்தியாளர்கள் ஓட்டு போட்டு! அதற்குப் பிறகு நீங்கள் சென்னையிலேயே இருந்து விட்டீர்கள் உங்களுக்கென இங்கு அலுவலகம் கூட கிடையாது, சிதம்பரம் தொகுதிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? என கேள்வி எழுப்பிய போது அந்த செய்தியாளர்களிடம் திருமாவளவனின் விடுதலை சிறுத்தை கட்சி ஆட்கள் வாக்குவாதம் செய்ததும், பின்னர் திருமாவளவன் விஷயம் விபரீதமாவதை புரிந்து கட்சியினரையும், பத்திரிகையாளரையும் சமாதானப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி காங்கிரஸ், விடுதலை சிறுத்தை என திமுக கூட்டணி கட்சியின் எம்பிக்கள் மக்களால் கேள்வி கேட்ட துரத்தப்படும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மக்களால் விரட்டப்பட்டார். கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கரூர் எம்பி ஜோதி மணியை ஓட்டு கேட்டு வரும் பொழுது உங்களை பார்த்தது அதன் பிறகு பார்க்க முடியவில்லை என மக்கள் கேள்வி எழுப்ப அங்கிருந்து ஜோதிமணி ஓடியதும், பின்னர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப செய்தியாளர்களிடம் கோபித்துக் கொண்டு எம்.பி ஜோதிமணி ஓடியதும் சம்பவமானது.
இப்படி தொடர்ச்சியாக திமுக கூட்டணி எம்பிக்கள் மக்களால் கேள்வி கேட்டு என்ன செய்தீர்கள்? பதில் கூறுங்கள் என மறைக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது திமுகவில் இருக்கக்கூடிய முக்கிய தலைவரான எம்பி கனிமொழிக்கு இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம் கோடிமுனை மீனவர் கிராமத்தில் உலகம் மீனவ தின விழா நேற்று நடைபெற்றது, இதில் திமுக எம்பி கனிமொழி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், ராஜேந்திர குமார், எம் பி விஜய் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இந்த விழாவில் கனிமொழி பேசினார்.