திமுகவின் டெல்டாக்காரன் பர்னிச்சரை சுக்குநூறாக உடைத்துப்போட்ட அண்ணாமலை... முதல்வருக்கு சொந்த மண்ணில் விழுந்த அடி!
முதல்வரின் டெல்டாகாரன் இமேஜை அடித்து உடைத்த அண்ணாமலை....
தற்போது அண்ணாமலை தமிழகத்தின் டெல்டா பகுதியில் 'என் மண் என் மக்கள்' யாத்திரையை நடத்தி வருகிறார், நேற்று தஞ்சாவூர் வந்தடைந்த 'என் மண் என் மக்கள்' யாத்திரை அணியினர் இன்று திருவையாறு, தஞ்சாவூர் பகுதியில் யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரணியம் என டெல்டா மாவட்டம் முழுவதும் யாத்திரை செல்லவிருக்கிறது. அடுத்த சில நாட்களுக்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களில் தான் அண்ணாமலை அவர்களின் யாத்திரை செல்லவிருக்கிறது. இந்த நிலையில் திருவையாறில் இருந்து தஞ்சாவூர் வரும் வழியில் அண்ணாமலை வயலில் இறங்கி விவசாயிகளுடன் சேற்றில் நடவு நட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது.
மேலும் மற்றொரு புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகிறது, திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வயலில் கான்கிரீட் போட்டு அதன் மேல் சாக்ஸ் போட்டுக் கொண்டு நடந்து வரும் ஒரு புகைப்படமும் மற்றும் சிவப்பு கம்பளம் விரித்து வயலில் நடந்து வரும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிறது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே நான் திருவாரூரை சார்ந்தவன், நானும் டெல்டா காரன் என்கின்ற முறையில் விவசாயிகளின் வலி எனக்கு தெரியும் எனக் கூறியதையும் குறிப்பிட்ட இணையவாசிகள் பல்வேறு கமெண்ட்களை பறக்க விடுகின்றன. டெல்டா காரன் என கூறினால் போதாது முதல்வரே இப்படி வயலில் இறங்கி விவசாயிகளுடன் வலியைப் புரிந்து அவர்களுடன் நடவு நடுவது போற்ற விவசாய பணிகள் எல்லாம் எப்படி செய்ய வேண்டும் என தெரிய வேண்டும், அதை விடுத்து வயலில் கான்கிரீட் போட்டுக் கொண்டு நடப்பது, ஒரு பச்சை துண்டு அணிந்துகொண்டு கட்டிக்கொண்டு நானும் விவசாயி என்பது, வயலில் சிவப்பு கம்பளம் விரித்து நடப்பது இவையெல்லாம் டெல்ட்டாக்காரருக்கு அழகல்ல எனக் கூறி பல கமெண்ட்களை முன்வைக்கின்றனர் இணையவாசிகள்.
அண்ணாமலையின் இந்த நடவு நடம் வீடியோ இணையத்தில் படுவைரலாக உலா வருகிறது.
மேலும் நேற்று திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற்ற யாத்திரையின்போது போது அண்ணாமலை பேசும் பொழுதும் திமுக விவசாயிகளுக்கு என்ன செய்தது எனக் கூறி பேசியதும் டெல்டாவில் பரவலாக பேசப்படுகிறது. அண்ணாமலை பேசும்போது, 'பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கடந்த 9 ஆண்டுகளில் 67% உயர்ந்துள்ளது 2013-14 ஆம் ஆண்டு ஒரு குவிண்டலுக்கு 1310 ரூபாயாக இருந்த கொள்முதல் விலை தற்போது ஒரு குவிண்டாலுக்கு 2,183 ரூபாயாக உயர்ந்துள்ளது.