திடீரென வெளியான துவாரகா வீடியோ... என்னதான் உண்மை?
இலங்கையில் 90களின் துவக்கத்தில் விடுதலை புலிகள் இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வந்த 2007 ஆம் ஆண்டு முற்றிலுமாக இயக்கத்தை நிறுத்தும் அளவிற்கு பல்வேறு வரலாற்று சம்பவங்கள் நடைபெற்றன, இந்தியாவில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும் தமிழகத்தில் திமுக ஆட்சியும் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் விடுதலைப்புலிகளின் இறுதி அத்தியாயம் முள்ளிவாய்க்காலில் அரங்கேறியது.
இன்னமும் விடுதலைப்புலிகள் அழித்தொழிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் திமுக கூட்டணி அரசுதான் காரணம், அப்பொழுது இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த இந்த இரு கட்சிகளும் இணைந்து இலங்கை அரசுக்கு செய்த உதவியின் காரணமாகத்தான் விடுதலை புலிகள் அழித்தெடுக்கப்பட்டார்கள், மத்தியில் சோனியா காந்தியும் தமிழகத்தில் கருணாநிதியும் தான் இந்த இன அழிப்புக்கு காரணம் என இன்று வரை ஈழ ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இவ்வளவு ஏன் இன்று ஈழத்தை வைத்து அரசியல் கட்சி ஆரம்பித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட 'என் இனத் துரோகி காங்கிரஸ்' என்றுதான் ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பிடுவார். அந்த அளவிற்கு ஈழத்தில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தை முற்றிலுமாக நிறுத்தியதற்கு பின்னணியில் காங்கிரஸ் தான் இருக்கிறது என இன்றளவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பழ.நெடுமாறன் கூறினார். விரைவில் வெளி வருவார், எனக்கு பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் மட்டும் வந்தது என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பிரபாகரன் மகள் குறித்த வீடியோ ஒன்று வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் தேதி ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் நினைவாக இலங்கை தமிழர்களால் மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவீரர் நாளில் மறைந்த விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மகள் உரையாற்ற உள்ளார் என சமூக வலைதளங்களில் திடீர் திடீரென அறிவிப்பு வெளியானது.
உடனே சமூக வலைதளம் பற்றிக் கொண்டது, சில நாட்கள் முன்பு தான் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றார்கள். தற்பொழுது பிரபாகரன் மகள் துவாரகா பேசுகிறார் என்றவுடன் இணையத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் நேற்று தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.