"நரேந்திர மோடி கி ஜெய்" என கூறிய எலி வளை சுரங்க தொழிலாளர்கள்.. இடதுசாரிகள் முகத்தில் கரியை பூசிய நெட்டிசன்கள்..

Update: 2023-12-01 11:02 GMT

உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை மீட்க கடைசியாக உதவிய ‘எலி வளை' சுரங்க தொழிலாளர்கள் நாடு முழுவதும் ஹீரோவாக கொண்டாடப் படுகின்றனர். உத்தராகண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையில் கடந்த 12-ம் தேதி எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டன. சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து 41 தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், தாராளவாதிகள் மற்றும் இடதுசாரி ஊடகங்கள் தொழிலாளர்களை இறுதியாக மீட்க வந்த எலிவளை ஊழியர்கள் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் அதனால் தான் அவர்களை முன்னிலைபடுத்த மற்றும் அவர்களைப் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த மத்திய அரசு மறுத்து வருவதாகவும் பல்வேறு விதமான தவறான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்


இதில் முக்கியமாக NDTV -யின் பிரபல மூத்த பத்திரிகையாளர்கள், ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் அவரது மனைவி சகாரிகா கோஸ் ஆகியோரும் இந்த கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக அவர்கள் தங்களுடைய எக்ஸ் வலைதள பக்கங்களில் குறிப்பிடும் பொழுது, "எலிவளை ஊழியர்கள் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள். அவர்களை கொண்டாட நாடு மறுக்கிறது. குறிப்பாக அரசு மறுக்கிறது. அவர்களுடைய பெயர்கள் இதோ! அவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்" என்று பதிவிட்டு இருக்கிறார்கள்.


இதற்கு இன்னொரு பயனாளர் சமூக வலைதள பக்கங்களில் அவருடைய கருத்தை தெரிவிக்கும் போது, "மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நபரின் முயற்சிகளையும், சுரங்கப்பாதையில் சிக்கியிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் பிரார்த்தனை செய்யும் அதே வேளையில், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புப் பணியாளர்களையும் தேசம் பாராட்டுகிறது. தேசம் அவர்களை இந்துக்களாகவோ முஸ்லீம்களாகவோ கிறிஸ்தவர்களாகவோ பார்க்கவில்லை. அனைவரும் சமமாக பாதுகாப்பாக வெளியே வர வேண்டும் என்பதே பிரார்த்தனைகள்" என்று கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.


இருப்பினும், பிளவுபடுத்தும் ஊடகங்கள் ஒவ்வொருவரின் மதத்தையும் குறிக்க அவர்களின் பெயர்களை முன்னிலைப்படுத்த வேண்டும். எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் “பாரத் மாதா கி ஜெய், நரேந்திர மோடி கி ஜெய்” என்று முழக்கங்களை எழுப்பியபோது இவர்கள் மற்றொரு பக்கத்தில் அதற்கு எதிரான கருத்துக்களை தேடி வருகிறார். இது, மக்கள் ஒற்றுமையாக இருப்பதையும், தங்கள் மதம் அல்லது பெயர்களின் அடிப்படையில் ஒருவரையொருவர் பார்க்காமல், இந்தியர்களாக, சிக்கிய தொழிலாளர்களை மீட்பதில் அற்புதமான பணியைச் செய்தவர்களாக இருப்பதையும் காட்டுகிறது. மொத்தத்தில் மீட்புக் குழுவின் உறுப்பினர்களை மக்கள் பாராட்டியபோது, ​​பிரிவினையை ஊக்குவித்ததற்காக நெட்டிசன்கள் இந்த ஒவ்வொருவரின் முகத்திலும் கரியை பூசும் இடமாக எலிவளை ஊழியர்களின் செயல் அமைதி இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News