ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கப்போகும் சாணக்யா.... அமித்ஷா மெகா பிளான் ஆன் தி வே.....

Update: 2023-12-01 14:56 GMT

அடுத்த அதிரடி ஆரம்பித்த அமித்ஷா... குடியுரிமை திருத்தச் சட்டம் ஆன் தி வே...

இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா கடந்த 2019 டிசம்பர் மாதம் 11ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, அதே ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில் சட்டமானது.

இந்த சட்டத்தின் அடிப்படையில் 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சைனர்கள், ஆர் சி கிறிஸ்தவ மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் இதில் இஸ்லாமியர் குறித்த எந்த விவரமும் இல்லை எனவே இந்த சட்டம் இஸ்லாமிய மக்களை குறிவைத்து செயல்படுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது மட்டும் அல்லாமல் பாஜக அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது என்ற காரணத்திற்காகவே நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இதற்கு எதிராக போராட்டங்கள் அதிக அளவில் வெடிக்க ஆரம்பித்தன.

ஆனாலும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் பின்வாங்குவது இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து வந்தது, மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் கொரோனப் பெருந்தொற்று முடிவுக்கு வந்த பிறகு குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என அமித்ஷா தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த சமயம் மேற்கு வங்கத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மத்தியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது மம்தா பானர்ஜி அரசியலை விமர்சித்து விட்டு கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நாங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம் எனவும் தெரிவித்தார். அது அப்பொழுது மீண்டும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது, இந்த நிலையில் தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார், அப்போது பேசிய அவர் 'இந்த பிரம்மாண்ட பேரணியில் அதிகப்படியான மக்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இது மக்களின் மனநிலையை குறிக்கிறது, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தை சீரழித்து விட்டார்' என கூறினார்.

இது மட்டுமல்லாமல் அவர் பேசும் பொழுது '2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதை நீங்கள் அனைவரும் உறுதி செய்ய வேண்டும்' என தொண்டர்களை கேட்டுக் கொண்டார்.

பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நாட்டின் சட்டம்! இந்த சட்டம் மத்திய அரசால் அமல்படுத்தபட்ட சட்டம், அதனை யாராலும் தடுக்க முடியாது' என திட்டமிட்டு கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசும்போது 'பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் மத்திய அரசு இதுவரை அதற்கான விதிகளை ஒதுக்கவில்லை அதன் காரணமாகத்தான் இந்த சட்டம் இழுவையில் உள்ளது, மம்தா அரசாங்கத்தை தூக்கி எறிந்து விட்டு மக்கள் பாஜகவை தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.

மேலும் இது குறித்து பாஜக நிர்வாகிகள் சிலரிடம் பேசிய பொழுது எப்படியும் பிரதமர் மோடி தான் மூன்றாவது முறையாக பிரதமராக வருவார், அப்பொழுது கண்டிப்பாக இந்த சட்டத்தை பாஜக இயற்றியே தீரும் இது நம் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் இதில் நாம் சமரசம் செய்து கொள்ளவே கூடாது என்பதில் பாஜக தலைமை உறுதியுடன் இருக்கிறது. நிச்சயம் சொல்லியபடியே அரசியல் சாணக்கியர் அமித்ஷா இதனை செய்து முடிப்பார் என திட்டவட்டமாக கூறுகின்றனர். இந்த விவகாரம் எதிர்க்கட்சிகள் மத்தியில் தற்பொழுது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது.

Similar News