ஆகாஷ் ஏவுகணையின் சாதனை.. மோடி அரசால் உலக நாடுகள் வியக்கும் இந்தியாவின் வளர்ச்சி..

Update: 2023-12-19 01:37 GMT

ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கிய ‘ஆகாஷ்’ ஏவுகணை சாதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு அடைந்து இருக்கிறது. குறிப்பாக உலக நாடுகளில் இதுவரை நான்கு இலக்குகளை துல்லியமாக அளிக்கும் திறன் படைத்த ஏவுகணைகளை இந்தியா தான் முதன் முதலில் சோதனை செய்து வெற்றி அடைந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மிகப்பெரிய முயற்சியின் காரணமாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இத்தகைய "ஆகாஷ் ஏவுகணை சோதனைகளை" வெற்றிகரமாக செய்து முடித்து இருக்கிறது. வானில் 25 கி.மீ தொலைவில் உள்ள 4 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கி இந்தியாவின் ‘ஆகாஷ்’ ஏவுகணை புதிய சாதனை படைத்துள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான IRDO தெரிவித்தது.


இதுதொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வெளியிட்ட பதிவில், "வானில் 25 கி.மீ. தொலைவில் உள்ள 4 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் ‘ஆகாஷ்’ ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் உலகில் முதல்முறையாக இத்திறன் படைத்த ஏவுகணையைக் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது" என குறிப்பிட்டனா். கடந்த டிசம்பா் 12-ஆம் தேதி நடைபெற்ற ‘அஸ்த்ர சக்தி’ ராணுவ பயிற்சியின்போது ஆகாஷ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இப்பயிற்சியை இந்திய விமானப் படையினா் மேற்கொண்டனா். தரையிலிருந்து வானில் 25 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஆகாஷ் ஏவுகணை, அதிக பாதிப்புகள் ஏற்படக் கூடிய பகுதிகளை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப் பபட்டது. இந்த சோதனையை தற்போது இந்தியா வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறது.


வானில் அதிவேகத்தில் அனுப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை இந்த ஏவுகணை துல்லியமாக இடைமறித்து தாக்கி அழித்தது. இதன் செயல்பாடுகள் ரேடார், எலக்ட்ரோ ஆப்டிக்கல் கண்காணிப்பு கருவிகள், கட்டுப்பாட்டு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டன. மோசமான வானிலையிலும் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் அனைத்து வானிலை சூழலிலும், இந்த ஏவுகணை வெற்றிகரமாக செயல்படும் என்பதை நிருபித்துள்ளது. இந்த பரிசோதனையை விமானப்படை அதிகாரிகள் குழுவும் பார்வையிட்டது. இந்த ஏவுகணை வானில் அதிவேகத்தில் வரும் எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் திறன் உடையது. இந்திய விமானப்படைக்கு இது நிச்சயம் வலு சேர்க்கும்.


இந்தியாவின் நட்புறவு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ராணுவ ஏவுகணைகளில் ஆகாஷ் ஏவுகணை முக்கிய பங்கு வகிக்கிறது. இதுவரை ஆகாஷ் ஏவுகணை இரண்டு இலக்குகளை சரியாக குறி பார்த்து அழிக்கும் திறன் கொண்டது. தற்பொழுது முதல் முறையாக 4 இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் படைத்ததாக மேலும் மெருகூட்டப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக வெளிநாடுகளில் இருந்து பல்வேறு ஆர்டர்கள் இந்தியாவிற்கு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. ஏற்கனவே பிரமோஸ் ஏவுகணை, டோா்னியா்-228 விமானம் உள்ளிட்டவை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மற்ற ராணுவ தளவாடங்கள் ஆகும். இதன் காரணமாக இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதியும் இனி மேலும் அதிகரிக்கும்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News