கூட்டணிக்காக ஓடிய முதல்வர்.... தமிழ்நாட்டுக்காக இறங்கிய தமிழக பெருமை பெண்கள் செய்த காரியம் தெரியுமா....

Update: 2023-12-19 09:01 GMT

சிக்கிய மக்கள்.... தமிழக பெருமைகள் நிர்மலா சீதாராமன், தமிழிசை சவுந்தரராஜன் செய்த காரியம் தெரியுமா....?

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு குமரி அருகே வங்க கடலில் ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்தது. அவ்வாறு கன மழை பெய்ததில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்கள் இதுவரை சமீப சில வருடங்களில் இல்லாத அளவிற்கு பெரும் கனமழையை சந்தித்தது.

குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களோ முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு அந்த ஊரில் இருந்து வெளியில் செல்லும் சாலைகள் இணைப்பு துண்டிக்கப்பட்டு, சில இடங்களில் தண்டவாளங்கள் அரிக்கப்பட்டு தனித்தீவு போல் மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 24 மணி நேரமாக பெய்த கனமழையின் காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின! தூத்துக்குடியின், திருநெல்வேலியின் பிரதான சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

நெடுஞ்சாலைகள் கூட வெள்ளத்தில் சிக்கியது, இந்த நிலையில் தூத்துக்குடி ரயில் நிலையம் ஒன்றில் வெள்ளநீர் புகுத்ததால் சுமார் 800 முதல் 1000 ரயில் பயணிகள் ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய நிலை ஏற்பட்டது.

அவர்களை மீட்பது குறித்தும் அனைவரும் மும்முரம் காட்டினர், இது குறித்து அவசர அவசரமாக ரயில்வே கோட்டம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ரயில் பாதையில் சரளை கற்களை வெள்ள நீர் அடித்துச் சென்றுள்ளது. அதன் காரணமாக பல இடங்களில் ரயில் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் இதன் காரணமாக ஸ்ரீவைகுண்டம் செய்துங்கநல்லூர் ரயில் பாதையில் திடீர் பாதிப்பு ஏற்பட்டதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயிலில் 800 பயணிகள் இருக்கின்றனர்' என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தமிழிசை சௌந்தர்ராஜன் உடனடியாக அவசர நடவடிக்கையில் இறங்கினார், திருச்செந்தூரில் இருந்து சென்னை வந்த ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி இருக்கும் தகவலை உடனடியாக மத்திய ரயில்வே இணைய அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் அவர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்தார், தெரிவித்தது மட்டுமல்லாமல் உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து அடுத்த நடவடிக்கையாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவையும் தமிழிசை சௌந்தர்ராஜன் தொடர்பு கொண்டார். தொடர்பு கொண்டு சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்க வேண்டும் இங்கு பேரிடர் காலம் என்பதால் உதவுவதற்கு நிறைய ஆட்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என நிலைமையை குறித்து விளக்கமாக கூறியதும் அதனை தொடர்ந்து விபரீதத்தை புரிந்து கொண்ட ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடியாக மீட்க கோரி அதிர்க்கரபூர்வ உத்தரவிட்டார்.

அந்தப் ரெயிலில் சிக்கிய பயணிகளுக்கு முதலில் உணவு வழங்க வேண்டும், பின்னர் அவர்களை மீட்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன் காரணமாக தற்பொழுது அங்குள்ள மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர், முதலில் அனைவருக்கும் குடிநீர் உணவு போன்ற தேவையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் இரண்டு டன் நிவாரண பொருட்களுடன் ஹெலிகாப்டர் சூலூரில் இருந்து ஸ்ரீவைகுண்டத்துக்கு புறப்பட்டு வந்து அவர்களுக்கு உடனடியாக நிவாரணப் பொருள், மருத்துவ உதவிப்பொருள், உணவுப் பொருள்களை விநியோகித்தது மட்டுமல்லாமல் உடனடியாக அங்கிருந்த 300 பேரை மீட்டது.

மேலும் சிக்கி உள்ள 500 பேரை மீட்கும் பணி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படி இயற்கை பேரிடர் என்றவுடன் சமயோசிதமாக செயல்பட்டு யாரை அழைத்துப் பேச வேண்டும் என்ன செய்ய வேண்டும் என நடவடிக்கை எடுத்ததன் காரணமாக தற்பொழுது கிட்டத்தட்ட 800 பயணிகள் மீட்கப்பட்டிருப்பது குறித்து தமிழிசைக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. இது மட்டுமல்லாமல் விவரம் அறிந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக மீட்பு படைகளையும் என்டிஆர்எப் படைகளையும் அனுப்பும்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அழைத்து கேட்டுக் கொண்டதன் பேரில் உடனடியாக மத்திய படையும் விரைந்து தூத்துக்குடியில் சிக்கிய பலரை மீட்டு வருகிறது.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அரசியல் கூட்டணிக்காக டெல்லி சென்றுள்ள நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டம் மக்களுக்காக உடனடியாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய முன்வந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இருவருக்கும் பாராட்டுக்கள் குவிகிறது.

Similar News