ஷார்ப்பான ஆப்பில் ஏறி உட்காரப்போகும் திமுக.... நெருங்கியது கிளைமாக்ஸ்.....!

Update: 2024-01-04 12:12 GMT

புத்தாண்டின் தொடக்கத்திலேயே வெடிக்கப் போகும் பிரச்சனை ஆட்டம்கான போகும் அறிவாலயம்! 


தமிழகத்தில் கடந்த 2021 திமுக ஆட்சி அமைத்ததிலிருந்து பல வகையில் சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை நிறைவேற்ற கோரி நடத்தப்படும் போராட்டங்களே தமிழகத்தில் அதிகமாக இருந்து வருகிறது. 


இந்த வரிசையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடும் அதிருப்தியை சம்பாதித்தது, ஏனென்றால் முதலில் அனைத்து குடும்ப தலைவிகள் என்று கூறிவிட்டு பிறகு சில நிபந்தனைகளையும் வரைமுறைகளையும் விதித்தது. இந்த வரைமுறைகளும் நிபந்தனைகளும் தமிழக மகளிர் தரப்பில் அரசின் மீது அதிருப்தி ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. 


அதற்குப் பிறகும் வரைமுறைக்குட்பட்டவர்களுக்கும் உரிமை தொகை கிடைக்காமல் இன்று வரையில் மறு விண்ணப்பம் மறு விண்ணப்பம் என்ற நிலைக்கு சில குடும்ப தலைவிகள் தள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக தமிழக ஆசிரியர் சங்கம் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் என மூன்று குழுக்களும் ஒன்று சேர்ந்து சென்னை டிபிஐ வளாகத்தை போர்க்களமாக மாறி இருந்ததும் செய்தி தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ் ஆக ஒளிபரப்பப்பட்டது! இந்த நிலையில் தமிழகத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பும் திமுக அரசின் மீது மக்களுக்கு பெரும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியது. அதோடு திமுக அமைச்சர்கள் தொடர்ந்து ஊழல் வழக்குகளில் சிக்கி வருவதும் திமுகவிற்கு எதிரான அலையை ஏற்படுத்தியது! 


இப்படி தொடர்ந்து பின்னடைவுகளையும் அதிருப்திகளையும் சந்தித்துக் கொண்டிருக்கும் திமுக அரசு 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்ற முனைப்பிலும் இருந்து வருகிறது. ஆனால் அதற்கான சாத்திய கூறுகள் இல்லாதது போன்ற சூழ்நிலைகளை தமிழகத்தில் தற்போது நிலவுகிறது. அதாவது 2024 ஆம் ஆண்டான புத்தாண்டு பிறந்து மூன்று நாட்களே ஆன நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஏழு கோரிக்கைகளை நிறைவேற்று வலியுறுத்தி ஜனவரி ஒன்பதாம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரசு போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளது. 


அதிலும் குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கும் இன்னும் சில மாதங்களில் உள்ள பரபரப்பான சூழலில் தமிழக போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மக்களை நேரடியாக பாதித்தது மட்டுமல்லாமல் திமுக அரசுக்கு நிச்சயம் பின்னடைவுகளை இந்த வேலை நிறுத்த போராட்டம் ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 


இதனை அடுத்து இந்தப் போராட்டம் குறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் தரப்பில் விசாரித்த பொழுது இந்த முறை நாங்கள் பின்வாங்க போவதில்லை! நாங்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் அவை அனைத்தும் நிறைவேற்றும் வரை நிச்சயம் நாங்கள் போராட்டத்தை தொடருவோம் என கூறியுள்ளனர். மேலும் குறிப்பாக போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது ஜனவரி ஒன்பதாம் தேதி, இதிலிருந்து அடுத்த இரண்டு நாட்களில் பொங்கல் பண்டிகைக்காக தங்களது சொந்த ஊருக்கு செல்ல மக்கள் அதிக அளவில் போக்குவரத்தை தான் நாடி வருவார்கள்! அவர்களை அழைத்து செல்வதற்கு பேருந்துகள் தயாராக இருக்க வேண்டும், ஆனால் இப்படி போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் சமயம் பார்த்து போராட்டத்தை அறிவித்துள்ளது நிச்சயம் திமுகவிற்கு கடும் பின் விளைவுகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. 

 

ஏற்கனவே சென்னை, தூத்துக்குடி வெள்ளம், அமைச்சர் மீதான ரெய்டு, செந்திபாலாஜி சிறையில் இருந்தும் அமைச்சராக இருப்பது, உதயநிதி சனாதன விவகாரம் போன்ற அனைத்தும் திமுகவிற்கு எதிராக மக்கள் மத்தியில் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் இந்த போராட்டமும் நிச்சயம் திமுகவிற்கு தேர்தல் நேரத்தில் பின்னடைவை நிச்சயம் ஏற்படுத்தும் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Similar News