அண்ணாமலைக்கு நன்றி.. உருகும் கேப்டன் விஜயகாந்தின் ஆதரவாளர்கள்.!

Update: 2024-01-06 04:23 GMT

1979 ஆம் ஆண்டு அகழ்விளக்கு திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய விஜயகாந்த் 2015 வரை கிட்டத்தட்ட 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்து கேப்டனாக உருவெடுத்தவர். தமிழ் சினிமாவிலும் சரி அதற்குப் பிறகு அரசியல் வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பொழுதும் சரி விஜயகாந்த் என்றுமே ஏழை எளிய மக்களுக்கு அதிக செய்தவர் இவரைப்போன்ற மனிதரை இனி சினிமா உலகில் பார்க்க முடியாது என்று தமிழில் சினிமாவின் பழம்பெரும் நடிகர்கள் சிலிர்த்து கூறுவதும் குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட ஒரு தலைவர் உடல் நிலை யால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனை சிகிச்சைகளுக்காக வெளிநாடு பயணங்களையும் மேற்கொண்டார். ஆனால் சமீபத்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 


இவரது இறப்பு செய்தி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு தமிழகம் முழுவதுமே வருத்தம் சூழ்ந்து கொண்டது. முன்னதாக மருத்துவமனை தரப்பில் விஜயகாந்த் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்ட உடனே முதலில் விஜயகாந்தின் உடல் அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது ஆனால் நேரம் செல்ல செல்ல அவரை காண்பதற்கு வரும் கூட்டமானது அதிகரித்துக் கொண்டே சென்றதால் கூட்ட நெரிசலில் ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதை கருதி அரசு தரப்பில் கேப்டனின் உடல் சென்னை தீவுதடலில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. ஆனால் தமிழ் திரை உலகின் சில முக்கிய நடிகர்கள் கேப்டனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளாமல் வெளிநாட்டில் இருந்ததாகவும் கூறப்பட்டது.


இந்த நிலையில் கேப்டனின் உடல் மக்களின் பார்வைக்காக அவரது இல்லத்தில் இருந்து இட வசதிகளை கொண்ட தீவுதிடலுக்கு மாற்றப்பட்டதை குறித்து நடிகர் மீசை ராஜேந்திரன் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. 


அந்த வீடியோவை நடிகர் மீசை ராஜேந்திரன், இந்த நேரத்தில் ஒருவருக்கு நன்றி கூற வேண்டும் என்றால் அண்ணாமலை அண்ணாவிற்கு நன்றி கூற வேண்டும் ஏனென்றால் அவர்தான் முதலில் கேப்டனை காண வருபவர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது எங்களால் சமாளிக்க முடியவில்லை இதனால் வேறு ஒரு இடத்திற்கு மாற்றி கேப்டன் விஜயகாந்த்திற்கு மணிமண்டபமும் கட்ட வேண்டும் என்று ஒரு அறிக்கையை முதலில் அண்ணாமலை அவர்களே வெளியிட்டார் அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். 


இவர் கூறியது போன்றே " தமிழகம் முழுவதும் இருந்து வரும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக அவரது குடும்பத்தினரின் அனுமதி பெற்று கேப்டனின் பூத உடலை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் மேலும் கேப்டன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டவும் தமிழக அரசு உடனடியாக இடம் ஒதுக்கி அவருக்கு மரியாதை செலுத்த முன் வர வேண்டும்" என்றும் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 


அண்ணாமலை கேப்டனாக குரல் கொடுத்ததன் காரணமாக, அண்ணாமலை அரசியலில் இறங்குவதற்கு முன்பாக அரசியல் குறித்து தனது கல்விக்காக பயிலும்போது பொழுது முதலில் தேமுதிக கட்சியை குறித்தே முதல் ப்ராஜெக்டை செய்துள்ளார், அந்த நன்றி விசுவாசத்திற்காகவே அண்ணாமலை இதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கேப்டனின் இறுதி சடங்கில் கூட்டம் அலைமோதிய போதும் கேப்டனின் முகத்தை கடைசியாக எந்த இடையூறும் இல்லாமல் பார்க்க முடிந்தது இதற்கு அண்ணாமலைக்கு தான் நன்றி கூற வேண்டுமெனவும், அரசியல் ரீதியாக அவர் கொடுத்த அழுத்தமே அரசை அடுத்த நடவடிக்கையில் ஈடுபட வைத்தது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News