பக்தர்களிடம் அடக்குமுறையை காட்டிய அறநிலையத்துறை.... முருக பக்தர்களின் பல வருட பழக்கத்தை மாற்ற துடிக்குதா அரசு.?
பழனி கோவிலில் நடந்த அத்துமீறல் கொதித்த பக்தர்கள்
தமிழகத்தின் இந்து சமய திருக்கோவில்களின் நிர்வாகத்தையும், கோவில்களை முறையாக பராமரிக்கவும் அதனை பாதுகாத்து மேற்பார்வையிடவும் 1959 ஆண்டிலிருந்து தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையை கொடைகள் சட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் அமைச்சராக சேகர் பாபு உள்ளார்.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாகவும், சுவாமி சிலைகளும் கடத்தப்படுவதாகவும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் கோவில்களை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு சில துயரங்கள் சந்திப்பதாகவும், திடீர் திடீரென தரிசன கட்டணங்கள் உயர்த்தப்படுவதாகவும் செய்திகள் வெளியானது.
ஏனென்றால் கோவிலை பாதுகாக்க வேண்டும் என்ற வகையில் இந்து சமய அறநிலையத்துறையால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் சில சமயங்களில் முறையற்றதாக இருக்கிறது என்றும் அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்காக நாங்கள் காலங்காலமாக செய்து வந்த வழிமுறைகளை எப்படி தவிர்ப்பது பல கேள்விகளும் பொதுமக்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படி இந்து சமய அறநிலைத்துறை குறித்த பரபரப்பான செய்திகள் தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தின் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் அரசின் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்தும் தமிழக பாஜக தரப்பில் உண்ணாவிரத போராட்டமும் நடத்தியது,
அந்த போராட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்திற்கு ஒரு தேவை இல்லாத துறையாக இந்து சமய அறநிலையத் துறை இருக்கிறது என்றும் தமிழக கோவில்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை மறைத்து தமிழக அரசு குறைந்த வருமானத்தை கணக்கு காட்டுகிறது என்றும் இதனால் கோவில் நிர்வாகத்தில் இருந்து அரசு வெளியேற வேண்டும் என்றும் குற்றம் சாடிருந்தார்.
இந்த நிலையில் இந்து சமய கோவில்கள் தொடர்பான மற்றும் ஒரு பரபரப்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடான பழனி முருகன் கோவிலில் தற்சமயம் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள் அதுமட்டுமின்றி பல நேர்த்திக்கடன்களையும் செலுத்துவர் அப்படி முருக பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக காவடி தூக்கிக்கொண்டு நாதஸ்வரம் மற்றும் தவில் முழங்க மலையில் ஏற முற்படும் பொழுது கோவில் ஊழியர்கள் பக்தர்களை தடுத்ததோடு நாதஸ்வரம் மற்றும் தவிலோடு கோவிலுக்குள் செல்லக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.