தேவையா இது? மாலத்தீவுக்கு விழுந்த முறையான அடி... பின்ன மோடின்னா சும்மாவா....?

Update: 2024-01-09 01:22 GMT

வீணாக வினையை தேடிக்கொண்ட மாலத்தீவு...!


பிரதமர் நரேந்திர மோடி இந்த வார தொடக்கத்தில் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார், அப்பயணத்தில் அனுபவித்த அனுபவங்களையும் அதனால் தனக்கு கிடைத்த அமைதி மற்றும் உற்சாகங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டிருந்தார். 

மேலும் சாகச பயணத்தை விரும்புபவர்கள் கண்டிப்பாக லட்சத்தீவிற்கு வர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். பிரதமரின் இந்த பதிவை பார்த்ததும் திடீரென கூகுளில் லட்சத்தீவு குறித்து பலர் ஆராய ஆரம்பித்தனர். மேலும் இனி விடுமுறையை கொண்டாட மாலத்தீவிற்கு பதிலாக லட்சத்தீவுக்கு போகலாமே என்ற பேச்சுகளும் வெளிவர ஆரம்பித்தது விவாதத்தில் முடிந்தது. 

மாலத்தீவிற்கு இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டிற்கும் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கு அதிகமானோர் தங்களது விடுமுறை நாட்களை கழித்து வருகின்றனர். இந்த நிலையில் இனி மாலத்தீவிற்கு பதிலாக லட்சத்தீவில் தங்களது விடுமுறையை கழிக்கலாம் என்ற விவாதங்கள் சூடு பிடித்த பொழுது மாலத்தீவில் இருந்தும் இதற்கான எதிர்ப்பதிவுகள் வர ஆரம்பித்தது. அந்தப் பதிவில் மாலத்தீவின் அமைச்சர் மரியம் ஷியுனா, மல்ஷா மற்றும் அசன் ஜிஹான் ஆகியோர் பிரதமரின் லட்சத்தீவு பயணம் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்ப ஆரம்பித்தனர். இந்த கருத்துக்களால் இந்தியாவிலிருந்து கடும் எதிர்ப்புகள் வர ஆரம்பித்தது, சாமானிய முதல் முக்கிய நட்சத்திரங்கள் வரை மாலத்தீவு அமைச்சர்களின் பதிவிற்கு எதிர்ப்புகளை தெரிவித்தனர். 

இதனை உடனடியாக அறிந்து கொண்ட மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத், மாலத்தீவு அமைச்சர் மரியம் மோசமான கருத்துக்களை பேசி வருகிறார். அதுவும் மாலத்தீவில் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு முக்கிய காரணமாக இருக்கும் நட்பு நாடாக இருக்கும் இந்தியா குறித்து இது போன்ற அறிக்கையில் இருந்து முய்ஸு அரசு விலகி இருக்க வேண்டும். மேலும் இது அரசாங்கத்தின் கருத்துகள் அல்ல என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்று சமூக ஊடகங்களில் தெரிவித்து மாலத்தீவு அரசிற்கு அறிவுரை வழங்கினார். இருப்பினும் இது குறித்த சர்ச்சைகள் வைரலானது, இதனை அடுத்து சில மணி நேரத்திற்கு பிறகு மாலத்தீவு அரசு, வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களுக்கு எதிரான சமூக ஊடக தளங்களில் வெளியிடப்பட்ட தரக்குறைவான கருத்துக்கள் மாலத்தீவு அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது இந்த கருத்துகள் அனைத்தும் தனிநபரை சார்ந்தது மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துகள் அல்ல என்றும் இதுபோன்ற தரக்குறைவான கருத்துக்களை வெளியிடுவோர் மீது சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார்கள் என்றும் பதிவிட்டதோடு மாலத்தீவு அமைச்சர்களான மரியம் ஷியுனா, மல்ஷா மற்றும் அசன் ஜிஹான் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து அறிவிப்பு வெளியிட்டது. 


இந்த நிலையில் இந்தியாவில் இருந்து மாலதீவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 

இதனால் மாலத்தீவு வருமானம் அடி வாங்கும் என்று தெரிகிறது குறிப்பாக இதுவரை 8000 ஹோட்டல் புக்கிங்களும் 2300 விமான டிக்கெட் புக்கிங்களும் ரத்தாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தேசத்தின் ஒற்றுமைக்காக இந்தியா - மாலத்தீவுகள் இடையேயான விமான பயணத்தின் முன்பதிவுகளை ஈசி மை ட்ரிப் என்ற நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ நிஷாந்த் பிட்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சுற்றுலாவை பெரிதும் நம்பி இருக்கும் மாலத்தீவு தற்பொழுது பாரத பிரதமர் மோடி குறித்து பேசிய ஒரே காரணத்திற்காக வருமானத்தை இழந்து நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Similar News