போக்குவரத்து தொழிலாளர் ரூபத்தில் திமுக அரசை நெருங்கும் சுனாமி.... வாரி சுருட்டப்போகும் அந்த விபரீதம்!
பொங்கல் நேரத்தில் அவஸ்தையில் மக்கள்
தமிழக போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கடந்த ஐந்தாம் தேதி போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் தரப்பில், போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்களில் நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலை வழங்குதல் மேலும் வேலை நேரத்தில் உயிரிழந்தவர்களின் வம்சாவளிக்கு பணிகளை வழங்குதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழக போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தது.
முன்னதாக கடந்த மாதம் 19 ஆம் தேதி அன்று ஆறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நோட்டீசை அனுப்பியதை அடுத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது ஏனென்றால் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் முதலில் நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை வழங்குங்கள் அதற்குப் பிறகு கூட மற்றவற்றை பேசிக் கொள்ளலாம் என்று முன்வைத்த குறைந்தபட்ச கோரிக்கை கூட தமிழக அரசு நிறைவேற்ற முடியாது என்று கூறியதால் வேலைநிறுத்தத்தையும் நிறுத்த முடியாது என்று சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வர வேண்டும் என்று அரசு தரப்பில் போக்குவரத்து ஊழியர்களுக்கு உத்தரவு விடப்பட்டது ஆனால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்தனர்.
அதிலும் குறிப்பாக பொங்கல் விடுமுறைக்கு அதிக அளவிலான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல உள்ள தினத்தை கணக்கிட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டிருப்பது தமிழக அரசை இக்கட்டான நிலைக்கு தள்ளியது! ஏனென்றால் போக்குவரத்துகள் அனைத்தும் இயங்கப்பட்டாலும் இந்த விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் ஆனால் தற்பொழுது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது போக்குவரத்து சங்கங்கள்!