ராமரை அவமதித்த காங்கிரஸ்! புண்ணிய பூமியில் நுழைய மறுப்பு!

Update: 2024-01-11 11:44 GMT

ராமரை அவமதித்த காங்கிரஸ் ஆரம்பித்தது விளையாட்டு! 


உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட வரும் ராமர் கோவில் ஜனவரி 22 ஆம் தேதி கும்பாபிஷேக விழாவுடன் திறக்கப்பட உள்ளது. இக் கோவிலுக்கு எளிதாக வருகை புரிவதற்கு ஏற்ற வகையிலே அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் என ரூபாய் 15 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு புத்தாக்கம் பெற்ற அயோத்தி விமான நிலையம் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என்றும், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள ராம் பாத், பக்திபாத், தரம்பாத் மற்றும் ஸ்ரீராம் ஜென்ம பூமி பாத் ஆகிய நான்கு சாலைகளையும் அயோத்தி ரயில் நிலையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். 


கும்பாபிஷேக விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர்களுக்கு அயோத்தி ராமர் கோவிலின் நிர்வாகம் சார்பில் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமர் கோவில் குறித்த பல செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது, அதன் படி ராமர் கோவிலுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பலராம பக்தர்கள் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். அதாவது இதுவரை ராமர் கோவிலுக்கு 5000 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளதாகவும், கோவில் பிரதிஷ்டை நிதிக்கு ரூபாய் 3200 கோடி இதுவரை வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த கேஷ்த்ரா தரப்பில் அறிவிப்பு வெளியானது. 


மேலும் ராமர் கோவில் கட்டுவதற்காக இதுவரை 18 ஆயிரம் கோடி ராமர் பக்தர்கள் நேஷனல் பேங்கிங் ஆப் இந்தியா வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது. இது மட்டும் இன்றி ராமர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள 46 கதவுகளில் 42 கதவுகள் முழுவதும் தங்க முலாம் பூசப்பட்ட கதவுகள் என்றும், கிட்டத்தட்ட 100 கிலோ தங்கம் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் பரபரப்பு தகவல் வெளியானது. முன்னதாக தமிழகத்தில் ராமர் கோவிலின் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதன் முதல் அழைப்பிதழ் கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் இல்லத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி மற்றும் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கும் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது இருப்பினும் இவர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வார்களா என்று கேள்வியும் பரபரப்பாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. இதனால் காங்கிரஸ் தரப்பில் இது குறித்த கேள்விகள் பத்திரிகையாளர்களால் முன்வைக்கப்படும் பொழுதும் கூட திறப்பு விழாவிற்கு இன்னும் அதிக நாட்கள் உள்ளது அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்ற மழுப்பலையே தெரிவித்து வந்துள்ளனர். 


ஆனால் இன்று அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழாவில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இருவரும் கலந்து கொள்ள போவதில்லை என்று அறிவித்துள்ளனர். 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பு பொதுச் செயலாளர் ரமேஷ் அறிக்கையும் வெளியிட்டுள்ளார். 


ஏற்கனவே சனாதன தர்மம் குறித்து உதயநிதி பேசிய விவகாரம் தான் INDI கூட்டணி மீது ஐந்து மாநிலங்களின் தேர்தலில் பெரிய அடி விழுந்தது, INDI கூட்டணியில் உள்ள கட்சியில் ஒருவர் சனாதனத்தை குறித்து பேசியதால் பெற்ற விளைவுகளையும் பொருட்படுத்தாமல் தற்பொழுது ராமர் கோவிலின் திறப்பு விழாவையும் புறக்கணித்திருப்பது நிச்சயம் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் இது எதிரொலிக்கும் என இப்பொழுதே அரசியல் விமர்சகர்களால் பேசப்படுகிறது.

Similar News