நம்புங்க இதுவும் இந்தியாதான்....! அடல் சேது கொடுத்து கெத்து காட்டும் மோடி அரசு.

Update: 2024-01-12 13:11 GMT

கவனிக்க வைக்கும் கட்டிடங்கள் பாலங்கள் மற்றும் உள்கட்ட அமைப்புகள் அனைத்தும் வெளிநாட்டில் தான் இருக்கும் இந்தியாவை இதுபோன்று வருவதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ! அவ்வளவு அழகான மற்றும் பிரமிக்க வைக்கும் கட்டிடங்களை பார்ப்பதற்கு நாம் வெளிநாட்டிற்கு தான் செல்ல வேண்டுமோ என்ற பேச்சுகள் நாட்டில் நிலை வந்ததை முறியடிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி தற்போது உள்கட்டமைப்பு வசதிகளை இந்தியாவில் மேம்படுத்தி வருகிறது. 


2014 இல் மத்தியில் ஆட்சி அமைத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி கிட்டதட்ட 10 ஆண்டுகளாக ஆட்சி அமைத்து வருகிறது. இந்த பத்து ஆண்டுகள் முழுவதிலுமே இந்தியாவை உயரத்தை இன்னும் அதிகமாக உயர்த்துவதற்கு போதிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் உள்ள உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாகவும் பிரம்மிக்க வைக்கும் அளவில் உள்ளது. போக்குவரத்து சாலைகள், விமான நிலையங்கள் ரயில் நிலையங்கள் என ஒவ்வொன்றுமே தற்பொழுது உயர்தர மதிப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது இந்த மாறுபாடு என்பது குறிப்பிட்ட ஓரிரு பகுதிகளில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலேயே நடைபெற்று வருகிறது. 


சமீபத்தில் கூட திருச்சியில் பன்னாட்டு விமான நிலையத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதுவும் இந்த விமான நிலையம் தமிழகத்தின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் விளக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது இதற்கு முன்பாக அயோத்தியில் ரூபாய் 1450 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய விமான நிலையத்தையும் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ஒவ்வொரு பகுதிகளிலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் அவர்கள் வருவதற்கு வழிவகை செய்யும் வகையிலும் ஏற்ற கட்டமைப்புகளை அனைத்து போக்குவரத்து தளத்திலும் அற்புதமான கட்டமைப்புகளுடன் தற்பொழுது இந்தியா காட்சியளிக்கிறது. 


அது மட்டும் இன்றி மத்திய அரசின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட வந்தே பாரத் ரயிலும் தற்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்புகளை பெற்று வருகிறது. நம் நாட்டு மக்கள் இதுவரை திரைப்படங்களிலும் புகைப்படங்களிலும் பார்த்து வந்த ஒரு உயர்தர ரயிலை இந்தியாவில் உருவாக்கி இந்திய மக்கள் பயன்படுத்துவதற்கு வழிவகை செய்தது மத்திய அரசு. இந்த நிலையில் உலகின் 12 வது நீளமான கடல் பாலமாக மும்பையில் அடல் சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். 


2016 ஆம் ஆண்டு டிசம்பரில் 1840 கோடி ரூபாய் செலவில் நாட்டின் மிக நீளமான பாலமான அடல் சேதுவை கட்டுவதற்காக பிரதமர் மோடி அடிக்கடி இருந்தார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவாக இந்த பாலத்திற்கு அடல் சேது என்று பெயரிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 21.8 கிமீ நீளம் கொண்ட இந்த பாலம் 16.5 கிலோமீட்டர் பகுதி கடலுக்கு மேலேயும் 5.5 கிலோமீட்டர் பகுதி நிலத்திற்கு மேலேயும் கட்டமைக்கப்பட்டுள்ளது. 


மேலும் இந்த பாலத்தால் இரண்டு மணி நேரம் பயணம் தற்பொழுது 15 நிமிடங்களில் முடிவடைய உள்ளதாகவும் மும்பையையும் நவி மும்பையையும் இணைக்கும் பாலமாகவும் இது அமைந்துள்ளது. அதோடு பூனே, கோவா மற்றும் தென்னிந்திய பயணமும் இந்த பாலத்தால் குறைந்த நேரத்தில் நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது இந்தப் பாலத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருவதால் இந்த பாலம் இந்தியாவில் தான் இருக்கிறதா இல்லை வெளிநாட்டில் இருக்கும் பாலமா என்று இணையவாசிகள் வியந்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Similar News