குஸ்தியில் கவுன்சிலர்கள்.... செல்லரித்துப்போன திமுக... முடிவுரை நெருங்கியது!
தென் மாவட்டத்தில் வந்த இடி போன்ற செய்தி அதிர்ச்சியில் அறிவாலயம்!
திமுக அரசு 2024 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே மூன்று அமைப்புகள் தரப்பிலிருந்து போராட்டங்களை சந்தித்தது. அதற்கு முன்பாக கடந்த டிசம்பர் மாதத்திலும் தமிழகத்தில் பெய்த கன மழையால் சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் கண்ட பெரும் பாதிப்பு திமுக அரசிற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் தூத்துக்குடியில் பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் மழைநீர் வழியாத நிலையில் உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
முன்னதாக திமுக அமைச்சரவையை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருப்பதும் அமைச்சராக இருந்த பொன்முடி தனது பதவியை இழந்து தற்போது சிறை தண்டனை பெற்றிருப்பதும் மக்கள் மத்தியில் திமுகவிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் திமுக உக்கட்சி பூசலாலும் பெரும் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக திருநெல்வேலியில் திமுக கவுன்சிலர் மற்றும் மேயருக்கிடையே ஏற்பட்டுள்ள உட்கட்சி சண்டை என்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அதாவது திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது அதில் 51 கவுன்சிலர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பாக உள்ளனர்.
இப்படி அதிமுகவை விட மாநகராட்சியில் அசுர பாலத்தில் இருக்கும் திமுக தன் சார்பாக பி எம் சரவணன் மேயராக தேர்வு செய்தது இதற்கு முக்கிய காரணமாக அப்போது மாவட்ட செயலாளராக இருந்து அப்துல் வஹாப் தனக்கு தெரிந்தவர் மற்றும் வேண்டுபட்டவர் என்ற காரணத்திற்காக சரவணன் அவர்களுக்கு மேயர் பொறுப்பு கிடைக்கும் படி ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மேயராக பொறுப்பேற்ற சரவணன் சில மாதத்திலேயே அப்துல் வகாப்பிற்கு எதிராக செயல்பட ஆரம்பித்துள்ளார். இதனால் பல ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் அவருக்கு எதிராக திரும்ப ஆரம்பித்தனர். மேலும் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மாநகராட்சி கூட்டங்களில் மேயரை வெளிப்படையாக குற்றம் சாடினர்!