ராமர் நடந்த மண்ணில் இருந்து அயோத்திக்கு செல்லும் மரியாதை....
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இதனால் ராமர் கோவிலின் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மும்முறமாக நடைபெற்று வருகிறது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்திக்கும் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்கு ஒரு முக்கிய தொடர்பு இருப்பதாக பிரதமர் மோடி அவ்வப்போது கூறி வருவார். இந்த தொடர்பை அயோத்தி கோவிலின் கட்டுமான பணிகளிலும் பிரதிபலிக்க உள்ளது, அதாவது தமிழகத்திலிருந்து அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் சென்றுள்ளது.
முதலில் ராமர் கோவிலுக்கு தேவையான 12 ஆலயமணி மற்றும் 36 பிடி மணிகள் என மொத்தம் 48 மணிகள் நாமக்கல்லில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திர நாயுடு என்பவர் அயோத்தி ராமர் கோவிலுக்கு மணிகளை வழங்க உள்ளார் அதற்கான அனுமதியை அவர் பெற்றவுடன் தமிழகத்தின் நாமக்கல்லில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் மோல்டிங் ஒர்க்ஸ் அவர்களிடம் அயோத்தி ராமர் கோவிலுக்கான பணி செய்யும் பணியினை வழங்கியுள்ளார்.
இந்த ஆர்டர் கிடைத்தவுடன் மொத்தம் 25 பேர் ஒரு மாத காலமாக இரவு பகலாக அயோத்தி ராமர் கோவிலுக்கு வேண்டிய மணிகளை செய்யும் பணியை மேற்கொண்டு முடித்துக் கொடுத்துள்ளனர். ராமர் கோவிலுக்கான மணிகள் மொத்தமும் 1200 கிலோ எடை கொண்டதாகவும் இம்மணிகளுக்கு தேவையான காப்பர், வெள்ளி, துத்தநாகம் போன்ற உலோகங்கள் அனைத்தையும் ராஜேந்திரன் நாயுடு அவர்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து நிறைவு பெற்ற மணிகள் அனைத்தும் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பூஜை செய்த பிறகு பெங்களூருக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு பிறகு அங்கிருந்து அயோத்திக்கு இந்த மணிகள் அனைத்தும் கொண்டு சென்று அலங்கரிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இது மட்டும் இன்றி தமிழகத்தில் இருந்து ஒரு தனியார் கட்டிடக்கலை குழுவே உத்தரப்பிரதேச மாநிலத்தில் பட்டறை அமைத்து அயோத்தி ராமர் கோவிலுக்கு வேண்டிய அனைத்து கதவுகளையும் செய்து கொடுத்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் மாமல்லபுரம் அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் பயின்று கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மாமல்லபுரத்தில் மரத்தின் கலை வேலைபாடுகளை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.