ராம ஜென்ம பூமி கடந்துவந்த பாதை.....
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்கின்ற 500 ஆண்டுகால கனவு நனவாகும் வகையில் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி கோவில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி கோவிலின் கருவறையில் அமைய உள்ள இடத்தில் 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட செங்கலை வைத்து அடிக்கல் நாட்டினார்.
பிரதமரால் தொடங்கபட்ட இந்த கோவில் தற்பொழுது முழுமை பெற்று ஜனவரி 22 ஆம் தேதி அன்று கும்பாபிஷேக விழா உடன் திறக்கப்பட உள்ளது. ஆனால் ராமர் பிறந்த மண்ணில் ராமருக்கான கோவில் அமைவதற்கு கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் ஆகி உள்ளது என்று கூறினால் யாராலும் நம்ப முடியுமா? ஆமாம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி என்பது சாதாரணமானது அல்ல அது ஒரு வரலாற்று நிகழ்வு! 1528 ஆம் ஆண்டில் அயோத்தியில் ராம் கோர்ட் மொகல்லாவின் மலை குன்றில் முகலாய சக்கரவர்த்தி பாபரின் உத்தரவில் அங்கு பாபர் மசூதி கட்டப்பட்டது. ஆனால் இந்த நிலத்தை பாபர் எங்கிருந்து வசப்படுத்தினார் அல்லது எப்படி கைப்பற்றினார் என்பது குறித்த ஆவணங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதனை அடுத்து 1853 ஆம் ஆண்டு அயோத்தி நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று சில இந்து அமைப்பினரும் இஸ்லாமிய அமைப்பினரும் மோதிக்கொண்டு வன்முறை வெடித்து 75 பேர் பலியானார்கள்.
பிறகு 1859 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இரண்டு மதத்தினரும் வழிபடும் வகையில் உட்பகுதி இஸ்லாமிய தரப்பினருக்கும் வெளிப்பகுதி ஹிந்து தரப்பினருக்கும் வழங்கப்பட்டு இருபுறமும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் 1949 இல் மசூதியில் ராமரின் சிலை தென்பட்டுள்ளது ஆனால் அதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு வெடித்தது அந்த தகராறு நிறுத்தி வைப்பதற்காக அரசு இரண்டு தரப்பினரும் வசதிக்குள் நுழையாதவாறு பூட்டு போட்டது. இதனை அடுத்து சுதந்திரத்திற்கு பிறகு அயோத்தி நிலம் தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்ற முதல் வழக்காக 1950 கோபால் சிங் விசாரத் அயோத்தியில் சிலைகளை யாரும் அகற்றக் கூடாது என பைசாவாது நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும், நிர்மோகி அகாரா அமைப்பும் இந்த பிரச்சனைக்குரிய இடத்திற்கு உரிமை கோரி அதே நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கையும் தொடர்ந்தது. அதுமட்டுமின்றி 1961 சென்னை மத்திய வக்பு வாரியம் பாபர் மசூதி உள்ள இடம் தங்கள் வசம் தரும்படி அதை பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தது. இப்படி ஒவ்வொரு பக்கமும் வழக்கு வெடிக்க அந்த வழக்கு மூலம் கொடுக்கப்பட்ட ஒரு தீர்ப்பால் கலவரமும் வெடித்தது.
இதனை அடுத்து அலகாபாத் உயர்நீதி மன்றத்திற்கு சர்ச்சைக்குரிய இடம் குறித்த முழு வழக்கு விசாரணையும் மாற்றப்பட்டது! 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு கலவரம் வெடித்து 2000 பேர் அந்த கலவரத்தில் பலியானார். அதனை தொடர்ந்தும் அடுத்த ஒரு கலவரம் ஏற்பட்டு அதிலும் பலி எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என முடிவு செய்வதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணையை தொடங்கியது! இந்த விசாரணையின் முடிவு 2010 செப்டம்பரில் வெளியானது ஆனால் அந்த தீர்ப்பை 2011ல் உச்சநீதிமன்றம் நிராகரித்து அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு தடை விதித்தது. மேலும் அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீடு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து 2019 இந்த வழக்கை விசாரிப்பதற்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் நியமித்ததை அடுத்து ஆகஸ்ட் மாதத்தில் இருந்து உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தினந்தோறும் விசாரிக்க தொடங்கியது. இறுதியாக 2019 நவம்பர் மாதத்தில் 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டுவதற்கு மூன்று மாதத்திற்குள் அமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் அயோத்தியில் இஸ்லாமியர்களின் மசூதி கட்டிக் கொள்வதற்காக 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பு பெற்ற உடனே மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்க்க கேஷத்ரா என்ற அமைப்பின் மூலமாக ராமர் கோவிலின் கட்டும் பணிகளை தொடங்கியது. 2.77 ஏக்கர் இடத்திற்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த பிரச்சனை தற்பொழுது இந்த நிலத்தை சுற்றியுள்ள 70 ஏக்கர் ட்ரஸ்டின் நிலத்தையும் சேர்த்து பிரம்மாண்டமாக ராமருக்கான ஆலயம் அமைக்கப்பட்டு உள்ளது என்பது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.