ராமர் ஆலயம் சாத்தியமானது எப்படி...?
உலகம் முழுவதும் ஒரு கோவிலின் கும்பாபிஷேக விழாவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம்! கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் ராமருக்கான கோவில் கட்டப்படுகிறது என்றும் அதற்கான முக்கிய ஆதாரங்களை நீதிமன்றத்தின் முன்பு வைத்தது ஒரு தொல்லியல் துறையின் அதிகாரி என்றும் அவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்ற தகவலும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றம் ராமர் கோவில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டப்படலாம் என்றும் இஸ்லாமிய சமயத்திற்கு மசூதி அமைப்பதற்கு வேறு ஒரு ஐந்து ஏக்க நிலத்தை அயோத்தியில் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக பல சர்ச்சைகளில் சிக்கி நடந்து வந்த இந்த வழக்கு 2019ல் ஒரு முடிவை எட்டியதற்கு முக்கிய ஆதாரமாக அமைந்தது பாபர் மசூதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு அறிக்கை! 1976 மற்றும் 77 இடைப்பட்ட காலத்தில் அயோத்தியில் இந்திய அகழ்வாராய்ச்சி முதல்முறையாக நடைபெற்றது. இந்த அகழ்வாராய்ச்சியில் பேராசிரியர் பிபி லால் தலைமையில் ஒரு குழு அயோத்தி நோக்கி சென்றது அந்த குழுவில் கேரளாவைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் கேகே முகமதுவும் இடம்பெற்றிருந்தார். உச்ச நீதிமன்றத்தில் இந்திய அகழ்வாராய்ச்சி குழு மேற்கொண்ட அகழ்வாராய்ச்சி மூலம் அதிகாரப்பூர்வ அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்பாக அயோத்தி உள்ள பாபர் மசூதி ராமர் கோவிலுக்கு மேல் கட்டப்பட்டுள்ளதாக கே கே முகமது உலகிற்கு எடுத்துரைத்து உண்மைக்கு துணையாக நின்றுள்ளார். இதனை அடுத்து அயோத்தி வழக்கு மிக தீவிரமடைந்து தொல்லியல் ஆராய்ச்சியாளர் கூறியது சர்ச்சைக்குரிய நிலத்தின் வழக்கிற்கு திருப்புமுனையாக அமைந்ததாக கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய உண்மையை முதலில் எடுத்துரைத்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் கே கே முகமது தற்போது தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியின் முதல் கேள்வியாக அயோத்தியில் கோவிலுக்கு மேல் தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதை நிரூபிப்பதற்கு என்ன மாதிரியான ஆதாரங்கள் உங்களுக்கு கிடைத்தது என்று கேட்கப்பட்டுள்ளது அதற்கு அவர், நாங்கள் மசூதிக்குள்ள சென்ற போது இந்து கோவில் தூண்களுக்கு மேல மசூதி இருப்பதை பார்த்தோம்! அந்த தூண்களின் அடிப்பகுதி முழுவதும் பூரண கும்பங்கள் அமைக்கப்பட்டிருந்தது. பூரண கும்பம் இந்துக்களின் எட்டு மங்கள அடையாளங்களில் ஒன்று அதோடு சிதைக்கப்பட்ட சிலைகளையும் அங்கு நாங்கள் கண்டுபிடித்தோம்! அதுமட்டுமின்றி செங்களால் கட்டப்பட்ட அடிமட்ட பகுதியும் தூண்களுக்கு கீழ் இருப்பதை கண்டோம்.
இவையெல்லாம் பொதுவாக கோவில்களில் மட்டுமே இருக்கும், மசூதிகளில் இருப்பதில்லை! இந்த ஆதாரங்களை வைத்து இந்த பகுதியில் முன்பு ஒரு கோவில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் உறுதி செய்தோம் என்று கூறினார் அதனை அடுத்து எனது அறிக்கையை 1990 இல் நான் சமர்ப்பித்த பொழுது என்னுடைய அலுவலக தொலைபேசிக்கு அதிக மிரட்டல்கள் வந்தது பிரச்சனை வரும் என்பதை தெரிந்துதான் இந்த அறிக்கையை சமர்ப்பித்தேன், இன்றுவரையிலும் அதற்கான பிரச்சனைகளை நான் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் ஒரு தொல்லியல் ஆய்வாளர் எப்பொழுதும் யாருக்குமே சார்பாக முடிவுகளை கூறக்கூடாது உண்மை பக்கமே நிற்க வேண்டும்! நீங்கள் இந்துவா முஸ்லிமா கிறிஸ்தவரா என்பது முக்கியமல்ல அறிவியல் பூர்வமான சான்றுகள் என்ன கிடைக்கிறதோ அதைதான் சொல்ல வேண்டும் அதன்படியே நானும் நடந்தேன்.